பருப்பு இல்லாமல் இட்லி தோசைக்கு வெறும் தக்காளி வைத்தே எப்படி சாம்பார் செய்வது?

tomato-sambar-idly

இட்லி தோசைக்கு தினமும் சட்னி அரைத்து சலித்துப் போனவர்கள் புதிதாக சாம்பார் செய்து பார்க்க ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் சாம்பார் வைப்பது மிகவும் கடினமான காரியமாக நினைத்து விட்டுவிடுவது உண்டு. மிக மிக எளிதாக பத்தே நிமிடத்தில் வெறும் தக்காளி, பச்சை மிளகாயை வைத்து சுலபமாக சூப்பரான அட்டகாசமான சுவையில் சாம்பாரை செய்து விடலாம். இட்லி, தோசை போன்றவற்றிற்கு சூப்பரான சாம்பார் நொடியில் தயாராகிவிடும். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

tomato-grow3

தக்காளி சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தக்காளி 4, பச்சை மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – ஒரு கப், மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு.

தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்.

onion

செய்முறை விளக்கம்:
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இந்த சாம்பார் செய்வதற்கு நிச்சயம் சின்ன வெங்காயம் தான் வேண்டும். பெரிய வெங்காயம் சேர்த்தால் அவ்வளவு சுவையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்களை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து விடவும். ஒரு மூன்று விசில் வரை விட்டு பிரஷர் குறைந்ததும் திறந்து பார்க்கலாம்.

tomato-sambar

தண்ணீர் முழுவதையும் வடித்து எடுத்துக் கொண்டு மீதமுள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கலவையை ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது வேறொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் முதலில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். அதன் பின் பெருங்காயத்தூள் சேர்த்து நறுக்கிய சின்ன வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதன் பின் வடித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

tomato-sambar1

பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து கீழே இறக்கி வைக்கவும். அவ்வளவுதாங்க சூப்பரான சுவையாக இருக்கும் வெறும் தக்காளி சாம்பார் இப்போது தயார் ஆகிவிட்டது. பருப்பு சேர்க்காமல் காய்கறிகள் எதுவும் இல்லாத சமயத்தில் உடனடியாக செய்யக்கூடிய அட்டகாசமான சாம்பார் இந்த தக்காளி சாம்பார்.

tomato-sambar2

இது இட்லி மற்றும் தோசைக்கு மிக அருமையான காம்பினேஷனாக இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த தக்காளி சாம்பார் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து உங்கள் குடும்பத்தினரை அசத்தி விடலாம். எப்பொழுதும் ஒரே விதமான சட்னி சாம்பார் வகைகளை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு இது புதிதாக வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக இருக்கும். பஞ்சு போன்ற இட்லியில் இந்த சாம்பாரை ஊற்றி ஊறவைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த சாம்பாரை நீங்கள் தண்ணீர் அதிகம் சேர்த்து நீர்மமாக செய்யலாம். கெட்டியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இதையும் படிக்கலாமே
முள்ளங்கியை வைத்து, ஒரு முறை இப்படிச் சட்னி அரைத்து பாருங்கள்! முள்ளங்கியில் வீசக்கூடிய வாடையே தெரியாமல் சுவையாக இருக்கும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.