- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கல்யாண வீட்டு பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே 10 நிமிடத்தில் எப்படி செய்வது?...

கல்யாண வீட்டு பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே 10 நிமிடத்தில் எப்படி செய்வது? இப்படி மட்டும் செஞ்சா நாவில் கரைந்து வாயும், மனமும் இனிக்குமே!

- Advertisement -

அரசாணிக்காய், மஞ்சள் பூசணிக்காய், பரங்கிக்காய் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூசணிக்காயில் நிறையவே சத்துக்கள் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கும் இந்த பூசணிக்காயை இப்படி அல்வா செஞ்சி பாருங்க, ஆரோக்கியம் மட்டுமல்ல அட்டகாசமான சுவையையும் கொடுக்கும். டேஸ்டியான கல்யாண வீட்டு இனிக்கிற தளதள பூசணிக்காய் அல்வா எப்படி வீட்டிலேயே செய்யப் போகிறோம்? என்பதை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பரங்கிக்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் – 300 கிராம், நெய் – 5 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, சர்க்கரை – அரை கப், ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

பரங்கிக்காய் அல்வா செய்முறை விளக்கம்:
பரங்கிக்காய் அல்வா செய்ய முதலில் பரங்கிக்காயை நன்கு சுத்தம் செய்து மேல் பகுதியில் இருக்கும் தோலை உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உள்ளே இருக்கும் விதைகளையும் நீக்கி காயை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கேரட் துருவலில் இட்டு துருவி கொள்ள வேண்டும். துருவினால் தான் அல்வா பதத்திற்கு நாம் கிண்ட முடியும்.

இப்போது அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் நன்கு சூடாகி காய்ந்ததும், அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். இதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் அதே நெய்யில் துருவிய பூசணிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.

- Advertisement -

பூசணிக்காயில் ஏற்கனவே நீர்விடும் தன்மை இருப்பதால் நெய்யில் வதக்கிய பின் சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு வேக விட்டால் ஐந்து நிமிடத்தில் நன்கு வெந்து வந்துவிடும். இப்போது தேவையான அளவிற்கு வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். தூளாக இல்லை என்றால் ஏலக்காய்களை தட்டி சேருங்கள். பிறகு அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்கு கரைய விடுங்கள். சர்க்கரை கரையும் பொழுதே பூசணிக்காய் உறிய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட இனி அசைவத்துக்கு பதில் இந்த பன்னீர் கிரேவிய தான் சப்பாத்தி பூரி பரோட்டாவிற்கு எல்லாம் சைடிஷா கேப்பாங்க, அந்த அளவுக்கு செம டேஸ்ட்னா சிம்பிள் கிரேவி ரெசிபி இது.

வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து, இப்போது இடையிடையே நீங்கள் கொஞ்சம் போல நெய் விட்டுக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டால் சரியாக இருக்கும். பின்பு நெய் பிரிந்து நன்கு கெட்டி ஆக பேனில் ஒட்டாத அளவிற்கு திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அதிகம் கிண்டினால் சாஃப்ட்டாக இருக்காது, ஹார்டாக மாறிவிடும். தட்டில் வைத்து சுடச்சுட சூடு பொறுக்க நாவில் வைத்து சுவைத்து பாருங்கள், அப்படியே கரைந்து போவீர்கள். அவ்வளவுதாங்க, ரொம்பவே ஆரோக்கியமான இந்த பூசணிக்காய் அல்வா ரெசிபி செம டேஸ்டியாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

சற்று முன்