- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொருளாதார முன்னேற்றம் உண்டாக பரிகாரம்

பொருளாதார முன்னேற்றம் உண்டாக பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. பணத்தை தான் நாம் பொருளாதாரம் என்று கூறுகிறோம். ஒருவருக்கு அதிக அளவில் பண வரவு ஏற்பட்டு குறைந்த அளவில் செலவுகள் உண்டாகும் எனில் அவருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எந்த அளவிற்கு சேமிப்பை நாம் உயர்த்துகிறோமோ அந்த அளவிற்கு பொருளாதார முன்னேற்றமும் உயரும் என்று கூறப்படுகிறது. அதனால் வீண் விரயத்தை தவிர்க்கவும் பணவரவை அதிகரிக்கவும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முன்னேற்றம் உண்டாக பரிகாரம்

பலரும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்வார்கள். என்னதான் பணவரவு அதிகரித்தாலும் அந்த பணவரவு தேவையற்ற வீண் விரயங்களாக மாறாமல் சேமிப்பாக உயர்ந்தால் தான் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான அனைத்து வித நல்ல காரியங்களையும் செய்ய முடியும் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தர முடியும். அப்படிப்பட்ட ஒரு பொருளாதார முன்னேற்றத்தை அருளக்கூடிய தெய்வமாக தான் மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மகாலட்சுமி தாயார் பல விதமான தாந்திரீக பொருட்களில் வீற்றிருக்கிறார் என்றும் அந்த தாந்த்ரீக பொருட்களை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது மகாலட்சுமியை நாம் எளிதில் வசப்படுத்தி நம்முடைய பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதனால் இந்த பரிகாரத்தை மகாலட்சுமிக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக மதியம் ஒரு மணியிலிருந்து 2 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நல்ல பலன் உண்டாகும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு மருதாணி விதை வேண்டும். எங்கு மருதாணி செடி இருக்கிறதோ அங்கு சென்று சரியாக மதியம் ஒரு மணியிலிருந்து 2 மணிக்குள் பறித்து வரவேண்டும். ஒருவேளை அப்படி மருதாணி செடி இல்லை என்பவர்கள் இந்த ஒரு மணியில் இருந்து 2 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடையிலிருந்து மருதாணி விதைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கொண்டுவந்த இந்த மருதாணி விதைகளை பன்னீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு வெள்ளை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி அந்த வெள்ளை நிற மூட்டைக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அந்த மூட்டையை கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தாயார் இடம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும், வீண் விரயங்கள் குறைய வேண்டும், சேமிப்பு உயர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த மூட்டைக்கு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிட்டு முழு பக்தியோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து பணம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

தினமும் பூஜை செய்யும் பொழுது இந்த மூட்டைக்கும் சாம்பிராணி தூபம் காட்டலாம். இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையிலாவது இந்த மூட்டைக்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த மூட்டையில் இருக்கக்கூடிய மருதாணி விதைகளை மாற்றி விட்டு புதிதாக மருதாணி விதைகளை வைக்க வேண்டும். பழைய மருதாணி விதைகளை ஓடுகின்ற நீரிலோ அல்லது செடிகளிலோ போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆடி செவ்வாய் எலுமிச்சங்கனி வழிபாடு

மகாலட்சுமி தாயாரேக்குரிய தாந்த்ரீக பொருட்களில் ஒன்றான மருதாணி விதையை பயன்படுத்தி மகாலட்சுமி தாயாருக்குரிய கிழமையில் மகாலட்சுமி தாயாருக்குரிய நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது விரைவிலேயே பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்