- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபங்குனி தேய்பிறை பிரதோஷ வழிபாடு

பங்குனி தேய்பிறை பிரதோஷ வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும் என்றும் அவர்களுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பிரதோஷ நாள் என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதால் அன்றைய தினத்தில் நாம் சிறப்பு மிகுந்த வழிபாடுகளையும் மந்திர உச்சாடலையும் செய்ய நம்முடைய கஷ்டங்கள் தீர்வதோடு செல்வ வளமும் அதிகரிக்கும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக பல இருந்தாலும் பிரதோஷ நாள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் சிவபெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். நம்மால் இயன்ற அபிஷேக பொருட்களையும், அலங்கார பொருட்களையும் சிவபெருமானுக்கு வாங்கித் தருவதோடு சிவபெருமானுக்குரிய மந்திரங்களை முழுமனதோடு உச்சரிப்பதன் மூலம் சிவபெருமானின் பரிபூரணமான அருள் கிடைக்க பெற்று வாழ்க்கையில் இருக்க கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை வீட்டில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை நேரத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரத்திலோ கூறலாம். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் ஆலயத்திலேயே அமர்ந்தும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். ஆலயத்திற்கு செல்லும் பொழுது சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக திருமஞ்சன பொடி, சந்தன பொடி இரண்டில் ஏதாவது ஒன்றை வாங்கித் தரலாம். விருப்பம் இருப்பவர்கள் இரண்டையும் வாங்கித் தரலாம். அதேபோல் சிவபெருமானிற்கு அலங்காரத்திற்காக வில்வ இலைகள், தாமரை மலர்கள், செம்பருத்தி மலர், ஊமத்தை பூ மற்றும் மாதுளை பூ இவற்றில் எது கிடைக்கிறதோ அதை வாங்கி தருவதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும்.

இதோடு மட்டுமல்லாமல் சிவபெருமானை நினைத்து அன்றைய தினத்தில் சிவபெருமானுக்குரிய மந்திரத்தை கூற வேண்டும். சிவபெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் தங்களால் இயன்ற எளிமையான மந்திரத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து கூறினாலே போதும் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் மிகவும் எளிமையான அதேசமயம் அதிசக்தி வாய்ந்த மூன்று மந்திரங்களை தெரிந்து கொள்வோம். இந்த மந்திரத்தில் ஏதாவது ஒன்றையோ அல்லது இந்த மூன்று மந்திரத்தையும் 108 முறை பிரதோஷ நாளன்று கூறி வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் சிவ சிவ ஓம்
ஓம் ஸ்ரீம் குருவே நமஹ
ஓம் சர்வம் சிவமயமே போற்றி”

இதையும் படிக்கலாமே:பணவசியம் ஏற்பட குபேர பிரதோஷ தீபம்

பிரதோஷ நாளன்று முழுமனதோடு பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது பிரதோஷ நேரத்திலோ இந்த மந்திரங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது கூறுவதன் மூலம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளத்துடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்