நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படி படிப்படியான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் நாம் செய்யக்கூடிய வேலையில் நமக்கு முன்னேற்றம் என்பது உண்டாக வேண்டும். வேலை மட்டும் அல்ல நாம் செய்யக்கூடிய தொழிலிலும் நமக்கு முன்னேற்றம் உண்டானால் தான் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி உண்டாகும். அதன் மூலம் வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறி உயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகன் வழிபாடு
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட முருக பெருமானை அவருக்குரிய சிறப்பு மிகுந்த நாட்களில் வழிபாடு செய்யும் வழக்கத்தை பலரும் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த தினங்களாக திகழ்வதுதான் செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாட்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. செவ்வாய்க்கிழமை இந்த ஒரு வழிபாட்டை நாம் செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தை அடைய முடியும்.
முருகப்பெருமான் என்றதுமே நம் நினைவிற்கு வருவது செவ்வாய்க்கிழமை தான். செவ்வாய்க்கிழமை அன்று நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நமக்கு நீங்கிவிடும். பலரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ வீட்டிலேயே வெற்றிலை தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள்.
இதை தவிர்த்து பொருளாதாரத்தில் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை பெற வேண்டும், வாழ்க்கையில் நல்ல உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய செவ்வாய் ஹோரை நேரத்தில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை என்பது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரும். இந்த மூன்று நேரத்தில் எந்த நேரம் தங்களுடைய வசதிக்கு ஏற்ற நேரமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு “ஓம் சரவணபவ” என்னும் முருகப்பெருமானின் மந்திரத்தை முழுமனதோடு கூற வேண்டும். அதுவும் அந்த செவ்வாய் ஹோரை இருக்கக்கூடிய ஒரு மணி நேரமும் நாம் இந்த மந்திரத்தை தீபத்தை பார்த்தவாறு கூறிக் கொண்டே இருந்தோம் என்றால் விரைவிலேயே முருகனின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:புண்ணியம் சேர்க்கும் ஏகாதசி
முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு எளிமையான தீப வழிபாட்டை செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.