உருளைக்கிழங்கு இருந்தா சட்டுன்னு 15 நிமிடத்தில் இந்த மாதிரி டேஸ்டியான அல்வா செஞ்சு பாருங்க, நாவில் அப்படியே கரையும்!

potato-halwa2_tamil
- Advertisement -

அல்வா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, அதிலும் உருளைக்கிழங்கு வைத்து அல்வா செய்தால் வித்தியாசமான சுவையுடன் நிச்சயம் இருக்கும். சாதாரண அல்வாக்களை விட சட்டுனு வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து செய்யும் இந்த உருளைக்கிழங்கு அல்வா ரெசிபி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு அல்வா ரெசிபி ஈஸியாக வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? அப்படின்னு தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கும் போகலாம்.

தேவையான பொருட்கள்

மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப், சர்க்கரை – முக்கால் கப், நெய் – எட்டு டேபிள் ஸ்பூன், முந்திரிப் பருப்பு – 15, மற்ற நட்ஸ் வகை – தேவையான அளவு, ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன், ஃபுட் கலர் – ஆப்ஷனல்.

- Advertisement -

செய்முறை

உருளைக்கிழங்கு அல்வா செய்வதற்கு முதலில் ஒரு கப் வரும் அளவிற்கு உருளைக்கிழங்கை வேக வைத்து கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாமல் மசித்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை நீங்கள் அப்படியே துருவலில் துருவியும் எடுத்து வைக்கலாம். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வையுங்கள். அதில் ஐந்து டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் தாராளமாக விட்டு மீடியம் ஃபிளேமில் காய விடுங்கள். நெய் கொஞ்சம் காய்ந்து வரும் பொழுது மசித்து வைத்த அல்லது துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிண்டி விட வேண்டும்.

ஒரு ஐந்துலிருந்து ஏழு நிமிடம் வரை இடை இடையிடையே நெய்யில் நன்கு உருளைக்கிழங்கை வறுக்க வேண்டும். சிறிது நேரத்தில் நிறம் லேசாக மாற ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் முக்கால் கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து கலந்து விட வேண்டும். சர்க்கரை சேர்த்ததும் உருளைக்கிழங்கு நன்கு இளக ஆரம்பிக்கும். இப்போது பேனில் ஒட்டாமல் நன்கு திரண்டு வரும் அளவிற்கு அல்வா பதத்திற்கு பிரட்டி விட வேண்டும்.

- Advertisement -

கெட்டியாக திரண்டு வரும் பொழுது, ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு, உங்களுக்கு பிடித்த மற்ற நட்ஸ் வகைகள், பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதைகள் போன்றவற்றை துருவி நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். இந்த சமயத்தில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஃபுட் கலர் ஏதாவது ஒரு கலரை சேர்த்து கலந்து விடலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம், இது ஆப்ஷனல் தான்.

இதையும் படிக்கலாமே:
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் ப்ரோக்கோலி வாங்கினால் கண்டிப்பாக இப்படி ஈஸியா கிரேவி செஞ்சு பாருங்க செம டேஸ்டாக இருக்கும்!

இவற்றை சேர்த்ததும் ஏலக்காய் தூள் அல்லது பொடித்த ஏலக்காயை சேர்த்து கலந்து விடுங்கள். கடைசியாக மீதம் இருக்கும் நெய்யையும் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விட்ட பிறகு அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். சுவையாக இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு அல்வா ரெசிபி செய்வதற்கு அதிக நேரமும் எடுக்காது, பொருட்களும் அதிகம் இருக்காது. எனவே டக்குனு செஞ்சி சாப்பிட கூடய வகையில் இருக்கக்கூடிய இந்த அல்வா ரெசிபியை நீங்களும் ஒருமுறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -