நம் உடம்பிலேயே முக சருமம் ரொம்பவும் மென்மையானதாக இருக்கிறது. இந்த சருமத்தை இயற்கையாகவே பாதுகாக்க சிறுசிறு துவாரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. காற்று, தூசு, மாசு போன்றவை முகத்தில் படியும் பொழுது சரும துவாரங்களுக்குள் சென்று தோல் பகுதியை சேதம் அடையாமல் பாதுகாக்கிறது. இந்த சருமத்துளைகள் பெரிதாகி விட்டால் முகம் முதிர்ந்த தோற்றத்தை எளிதாக அடைந்து விடுகிறது. சரும துவாரங்கள் இறுகி, முகம் மென்மையாக மாற, உருளைக்கிழங்கு சாறை எப்படி பயன்படுத்தலாம்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
சரும துவாரங்கள் வழியே ஊடுருவி சென்றுள்ள அழுக்குகளை நீக்குவதற்கு உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் நமக்கு உதவியாக இருக்கிறது. முதலில் ஒரு உருளைக்கிழங்கை நன்கு தோல் சீவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு, நைசாக அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு சாறு இரு வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.
பாதி உருளைக்கிழங்கு சாற்றில் ஒரு மீடியம் சைஸ் கற்றாழை மடலை எடுத்து உள்ளே இருக்கும் ஜெல்லை பிரித்து சுத்தம் செய்து கழுவி இதனுடன் கலந்து கூழ் போல செய்து கொள்ளுங்கள். ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து கட்டியானதும் பயன்படுத்தலாம். மீதமிருக்கும் உருளைக்கிழங்கு சாற்றுடன் தேவையான அளவிற்கு பச்சரிசி மாவு சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் இரண்டு நிமிடம் மென்மையாக மசாஜ் போல செய்து உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்து காய்ந்ததும் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். இது முக துவாரங்களுக்குள் சென்று அங்கு படிந்துள்ள அழுக்குகளை எல்லாம் முற்றிலுமாக நீக்குகிறது. இறந்த செல்களையும் வெளியேற்றி, புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதனால் முகம் இழந்த பொலிவை மீண்டும் அடைவதற்கு ஏதுவாக இருக்கிறது.
இதை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வாரத்திற்கு இரண்டு முறை செய்து வாருங்கள். இந்த பேக் போட்டு முடித்த பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஐஸ் கட்டிகளை வைத்து மென்மையாக முகத்திற்கு மசாஜ் கொடுக்க வேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடம் இந்த ஐஸ் க்யூப் வைத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் சருமத்தில் உண்டாகி இருக்கும் துளைகள் இறுக ஆரம்பிக்கும். ஓப்பன் போர்ஸ் எனப்படும் இந்த சருமத்துளைகள் மெல்ல மெல்ல இறுகி முழுமையாக மூடிவிடும். இதனால் நீங்கள் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்துடன் இருப்பீர்கள். உங்களுடைய முதுமை தன்மையை இது ரொம்பவே சுலபமாக விரட்டி அடித்து விடும் ஆற்றல் கொண்டுள்ளது.
இதையும் படிக்கலாமே:
மார்கழி வெள்ளி வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்
இந்த ரெண்டு விஷயங்களையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வாரம் இருமுறை செய்து வர உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய சரும துளைகள் சீக்கிரமாகவே முழுமையாக மறைந்து இளமையான தோற்றத்தை கொடுக்கும். மேலும் சருமத் துளைகளுக்குள் சென்றிருக்கும் அழுக்குகளையும் நீக்கி, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். அடிக்கடி வெயிலில் சுற்றுபவர்கள், தூசுகளில் வேலை செய்பவர்கள், வியர்வை அதிகமாக கொண்டவர்கள், நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்துபவர்கள் இந்த குறிப்பை தொடர்ந்து முயற்சித்து பாருங்கள், உங்களுடைய சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.