பாயா டேஸ்ட்ல சூப்பரா ஒரு தக்காளி குருமாவ இப்படி ஒரு முறை செய்து பாருங்க, இது பாயா இல்லைன்னு சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க. இட்லி தோசை பூரி சப்பாத்தி என எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும்.

- Advertisement -

டிபன் வகைகளுக்கு எப்போதும் சட்னி சாம்பார் போன்றவற்றை செய்தாலும் கூட, அசைவத்தில் செய்யப்படும் குருமா, பாயா போன்றவை எல்லாம் இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவையாகவே இருக்கும். அதே நேரத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். அதற்காக தினமும் நாம் அசைவத்தையே சமைக்க முடியாது அல்லவா. அசைவம் சாப்பிட முடியாத நாட்களில் கூட அதை சுவையில் அருமையான ஒரு தக்காளி எப்படி செய்வது என்பதை தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த குருமா செய்வதற்கு முதலில் 1/2 முடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் 1 பெரிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் 3 பெரிய தக்காளியையும் பெரியதாகவே நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த குருமாவிற்கு ஒரு மசாலாவை அரைத்து விடுவோம். அதற்கு மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே துருவி வைத்து தேங்காய் துருவலுடன், 4 பச்சை மிளகாய், 10 முந்திரி பருப்பு ,1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு, 1டீஸ்பூன் சோம்பு, 5 பல் பூண்டு 1 துண்டு இஞ்சி, இவை எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பயன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் 1 பட்டை, 2 கிராம்பு,1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் மிளகு எல்லாம் சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த பிறகு ஏற்கனவே அரிந்து வைத்த தக்காளியும் சேர்த்து லேசாக ஒரு பிரட்டு மட்டும் பிரட்டி விட்டால் போதும். தக்காளி குழைய வதங்க கூடாது.

- Advertisement -

இந்த வெங்காயம் தக்காளி கலவையுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொஞ்சமாக தண்ணீரும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் சேர்த்த பிறகு குருமாவிற்கு தேவையான 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை மூடி போட்டு இரண்டு விசில் மட்டும் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மிளகு அவல் செய்முறை: Milagu Aval Recipe in Tamil

விசில் இறங்கிய பிறகு மூடியை திறந்து கொஞ்சமாக கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக அரிந்து மேலே தூவி கலந்து பரிமாறுங்கள். பாயாவே தோற்றுப் போகும் அளவுக்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. இனி என்ன டிபன் செய்தாலும் இந்த குருமா தான் சைடிஷ் ஆக இருக்கும்.

- Advertisement -