பொட்டேட்டோ வெஜிடபிள் பால்! இந்த ரெசிபியை செய்யறது சாம்பார் வைப்பதை விட ரொம்ப ரொம்ப ஈஸி!

veg-ball
- Advertisement -

நம்முடைய வீட்டில் அன்றாடம் மதிய உணவு சமைப்பதை விட, இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்வது ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு விஷயம். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இந்த உருளைக்கிழங்கு காய்கறி போண்டாவை தயார் செய்து விடலாம். ஆங்கிலத்தில் பொட்டெட்டோ வெஜிடபிள் பால், என்று சொல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

veg-ball1

முதலில் 3 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை எடுத்து வெட்டி தண்ணீரில் போட்டு வேகவைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கில் சுத்தமாக தண்ணீர் இருக்கக் கூடாது. என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுக்கு ஆனியன் ஸ்பிரிங் என்று சொல்லப்படும் வெங்காயத்தாள், கிடைத்தால் அதை இந்த ரெசிபிக்கு பயன்படுத்தலாம். இல்லை என்றால், 4 லிருந்து 5 பீன்ஸை மிகப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு கேரட்டை எடுத்து தோல் சீவி நன்றாக துருவிக் கொள்ள வேண்டும்.

veg-ball3

ஒரு அகலமான பவுலில் முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். ஒரு மத்து இருந்தால், அதை போட்டு கட்டியில்லாமல் உருளைக்கிழங்கை மசித்து விடுங்கள். நசுக்கிய இந்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய – பீன்ஸ், துருவிய கேரட், கான்பிளவர் மாவு – 3 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த அளவுகளில் எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக இந்த கலவையை பிசைந்து கொள்ள வேண்டும். இன்னும் கொஞ்சம் காரம் அதிகமாக தேவைப்பட்டால் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெயை மிதமாக சூடு படுத்தி, இந்த பொட்டேட்டோ பால்களை பொன்னிறமாக பொறித்து எடுத்து சுடச்சுட பரிமாறுங்கள். அப்படியே சாப்பிட்டாலும் சுவை கூடுதலாகத்தான் இருக்கும்.

veg-ball2

நம்முடைய வழக்கப்படி தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும் பரிமாறலாம். கொஞ்சமாக டொமேடோ சாஸ் தேவைப்பட்டால், டொமேடோ சாஸ் தொட்டும் இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிம்பிள் ரெசிபிகளில் இதுவும் ஒன்று. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -