10 நிமிடத்தில் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான குருமா. இந்த குருமா செய்ய தேங்காய் சேர்க்க வேணாங்க.

sambar
- Advertisement -

நிறைய ரோட்டு கடைகளில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஒரு குருமா கொடுப்பார்கள். அதை பார்ப்பதற்கு குருமா போல இருக்கும். சாப்பிட்டால் சாம்பார் போலவும் இருக்கும். இதை எப்படி செய்தார்கள் என்றே நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சுடச்சுட இட்லிக்கு மேலே தண்ணீர் போல காரசாரமாக இருக்கும் இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். அதே போல ஒரு குருமா ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரெண்டு இட்லி சாப்பிடறவங்க இந்தக் குருமா ஊற்றினால், இன்னும் 4 இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க. நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்த்துவிடுவோம்.

1/4 கப் அளவு பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக பொடி செய்து, 2 டம்ளர் தண்ணீரில் இந்த மாவை போட்டு கரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸி ஜாரில் இரண்டு பழுத்த தக்காளிப் பழங்களைப் போட்டு அரைத்து அதையும் விழுதாக எடுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/4 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு பல் – 10, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 4 குறுக்காக கீறியது, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கவேண்டும். பச்சை மிளகாயின் காரம் தான் இந்த குருமாவில் தூக்கலாக இருக்கனும். பச்சைமிளகாய் பச்சை வாடை போகும் வரை வதக்குங்கள்.

அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கி வந்ததும் மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி, 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சாம்பார் தூள் – 1/2 ஸ்பூன் போட்டு, பச்சை வாடை போகும் வரை கொதிக்க வையுங்கள். தக்காளியின் பச்சை வாடை நீங்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு பொட்டுக்கடலையை அரைத்து தண்ணீரில் போட்டு கரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா, அதையும் இந்த கடாயில் ஊற்றி கலந்து, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு மூடி போட்டு 4 லிருந்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து வேக வைத்து எடுத்தால் சூப்பரான தக்காளி குருமா அல்லது தக்காளி சாம்பார் தயாராகியிருக்கும். இதற்கு மேலே கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.

இந்த குருமா ரொம்பவும் திக்காக இருக்க கூடாது. கொஞ்சம் நீர்க்க இருக்க வேண்டும். அதே சமயம் உப்பு காரம் கொஞ்சம் உரைப்போடு இருக்கும்போது இதனுடைய சுவை இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -