பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

pottukadalai-muruku

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வீட்டிலேயே சுலபமாக, சுவையாக, ஒரு பொட்டுக்கடலை முறுக்கு எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த முறுக்கு செய்ய அதிக நேரமும் எடுக்காது. அதிக சிரமமும் இருக்காது. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான இந்த முறுக்கை எப்படி செய்வது என்பதை பற்றி பார்த்துவிடலாமா?

muruku3

வெண்ணை சேர்த்த பொட்டுக்கடலை முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – 1/4 கப், அரிசி மாவு  – 1 கப், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், எள்ளு –  1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் – 1/2 ஸ்பூன்.

கடையில் விற்கும் அரிசிமாவையே பயன்படுத்திக்கொள்ளலாம். ஓமம் வாசனை பிடிக்கும் என்றால், கொஞ்சம் ஓமம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் வெண்ணை இல்லை என்றால், 1/2 ஸ்பூன் அளவு டால்டாவை உருக்கி சேர்த்து பிசைந்தாலும் முறுக்கு மிருதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்ணையை அளவோடு தான், ஊற்றவேண்டும். அதிகமாக ஊற்றி விட்டீர்கள் என்றால், முறுக்கு உடைந்து போகும்.

muruku1

முதலில் பொட்டுக்கடலை மாவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சல்லடையை, அகலமான பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்த பொட்டு கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து, நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சலித்த இந்த மாவோடு பெருங்காயம், சீரகத்தூள், உப்பு, வெண்ணெய், எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் உங்கள் கைகளால் நன்றாக கலந்துவிடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பாக கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, மாவை பிசைய தொடங்குங்கள். தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. பிசுபிசுப்பு தன்மை வராத அளவிற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை, ஐந்து நிமிடங்கள் ஊற வையுங்கள். மாவு, தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு கெட்டிப் பதத்துக்கு வந்திருந்தால், ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு மீண்டும் மாவை பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு பிழிய தொடங்கலாம்.

muruku4

மூன்று துளைகள் உள்ள தேன்குழல் முறுக்கு அச்சை பயன்படுத்தி, இந்த முறுக்கை செய்தால் ருசியாக இருக்கும். முறுக்கு அச்சில் மாவை போடுவதற்கு முன்பு அச்சில் உள்பக்கத்தில் எண்ணையை லேசாக தடவிக் கொள்ளுங்கள். மாவை மேலே வைத்து, பிழியும் கட்டையிலும் எண்ணையை தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக மாவை முறுக்கு அச்சில் சேர்த்து, முழுக்கை பிழிய வேண்டியதுதான்.

muruku2

ஒரு பெரிய ஜல்லி கரண்டியை, தட்டின் மேல் கவிழ்த்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் மேல், கொஞ்சம் எண்ணெய் தடவி விட்டு, முறுக்கை பிழிந்து சுலபமாக எண்ணெய் சட்டியில் விட்டு விடலாம். ஆனால், எண்ணெய் சட்டிக்குள், சூடான எண்ணெயில் முறுக்கை எடுப்பதற்கு தனி கரண்டி பயன்படுத்த வேண்டும். முறுக்கை பிழிந்து விடுவதற்கு தனி கரண்டியை, பயன்படுத்த வேண்டும். சூடான கரண்டியில் முறுக்கு பிழிந்தால், மாவு கரண்டியில் ஒட்டிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

muruku

முறுக்கை எண்ணெய் சட்டியில் விட்டு விட்டு, மிதமான தீயில் முறுக்கை சிவக்க வைக்க வேண்டும். அதன் சிடசிடப்பு அடங்கியதும் முழுக்கை எடுத்துவிடலாம். அதிகப்படியாக சிவப்பு நிறம் வரும் அளவிற்கு விட வேண்டாம். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் முறுக்கை எண்ணெயில் விட்டு விட்டு, அதன் பின்பு அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

muruku5

சூடாக சாப்பிட்டு பார்க்கும்போது முறுக்கு லேசாக நமுத்த படத்தில் தான் இருக்கும். முறுக்கு நன்றாக ஆறியதும், சாஃப்டாகவும் இருக்கும். மொறுமொறுப்பாகவும் இருக்கும். ஆரிய முறுக்கை காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டால் 4 நாட்களுக்கு தேவையான ஸ்னாக்ஸ் ரெடி!

இதையும் படிக்கலாமே
காலையில் எழுந்ததும் நீங்க இதெல்லாம் செய்வீங்களா? செய்யலைன்னா! நீங்க வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டம் தான் பாத்துக்கங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.