- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை நிறைந்த பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

நாளை நிறைந்த பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் கெட்ட நேரம் ஆரம்பிக்க துவங்கி விட்டால், வரக்கூடிய நல்லது கூட நம்மை நோக்கி வராமலேயே பின்நோக்கி செல்லும். அதே போல தான், கெட்ட நேரம் துவங்கி விட்டால், நமக்கு வரக்கூடிய பணம் கூட வராமல் நமக்கு பிரச்சனை தரும். நாம் செய்யக்கூடிய நல்ல செயல்களில் முட்டுக்கட்டை உண்டாகும். தொடர் தோல்வி வரும். இதனால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

இப்படி பலதரப்பட்ட பிரச்சனையில் இருந்தும் வெளிவர வேண்டும். நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியிலிருந்து விடுபட வேண்டும், வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால், பௌர்ணமி நாளில் நம்மை நாமே சுத்தம் செய்து கொள்ள, நம் ஆராவை நாமே புதுப்பித்துக் கொள்ள, நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய அதிகம் செலவு செய்ய வேண்டாம். செம்பருத்திப்பூவும் மஞ்சள் கிழங்கு இந்த 2 பொருட்கள் இருந்தாலே போதும். இந்த பௌர்ணமி நாளில் இருள் சூழ்ந்த உங்கள் வாழ்க்கை, வெளிச்சத்திற்கு வந்து விடும். நாளை திங்கட்கிழமை 6-10-2025 அன்று நிறைந்த பௌர்ணமி நாள். பௌர்ணமி மாலை 6:30 மணி அளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

நீங்கள் ஏற்றிய விளக்கை சுற்றி 7 செம்பருத்தி பூவை வட்டமாக அடுக்கி வைக்கவும். அகல்விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு எந்த விளக்கு ஏற்றினாலும் தவறு கிடையாது. உங்களுடைய வலது கையில் ஒரே ஒரு குண்டு மஞ்சளை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபச்சுடரை பார்த்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை, இந்த பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள்.

- Advertisement -

உங்கள் குலதெய்வத்திடம் சொல்லுங்கள். கடவுளிடம் சொல்லுங்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை எதன் மீது உள்ளது? அந்த குறிப்பிட்ட சக்தியிடம் உங்களுடைய பிரச்சினைகளை சொல்லி மனதார வேண்டிக் கொண்டால், நீங்கள் எதற்காக பிரார்த்தனை வைத்திருக்கீர்களோ, அந்த வேண்டுதல் அடுத்த பௌர்ணமி நாளுக்குள் நிறைவேறும்.

உங்கள் கையில் இருக்கும் மஞ்சள் நெகட்டிவ் ஆராவை அழித்துவிடும். விளக்கை சுற்றி இருக்கும் செம்பருத்திப்பூ நேர்மறையான ஆற்றலை இந்த பிரபஞ்சத்திடம் கொடுத்துக்கொண்டே இருக்கும். இந்த பூமி முழுவதும் பௌர்ணமி நிலவின் வெளிச்சம் பரவி இருக்கும் போது, அதன் மூலம் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வைக்கும் வேண்டுதல் பலிக்காமல் போவதற்கு வாய்ப்பே கிடையாது.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க பிள்ளையார் பரிகாரம்

பெரும்பாலும் நகையை அடமானம் வைத்திருப்பவர்கள், கடன் கஷ்டத்தில் மூழ்கியுள்ளார்கள், பணத்தை கடனாக வாங்கி திரும்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டத்தில் மூழ்கி இருக்கிறார்கள், வேலையில்லாமல், தொழில் சிறப்பாக நடக்காமல் கஷ்டப்படுகிறார்கள், இப்படிப்பட்ட பிரச்சனையிலிருந்து வெளிப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், நல்ல வாழ்க்கை துணை அமைய பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர மேல் சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

சற்று முன்