ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த தானம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பம் என்பதே வராதாம்! 7 ஜென்ம பாவங்களும் நீங்கி விடுமாம்.

thanam-pournami
- Advertisement -

ஏழேழு ஜென்ம பாவங்களை கூட தீர்க்கக் கூடிய தானம் இது. தெரிந்தோ தெரியாமலோ ஆயிரமாயிரம் பாவங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் தெரிந்தே செய்த பாவங்களுக்கு இந்த உலகத்தில் மன்னிப்பு இல்லை என்று தெரிந்தும் பாவம் செய்பவர்கள் வாழும் காலத்திலேயே நரகத்தை அனுபவிப்பதை இன்று பலரும் பார்த்திருப்போம். இதனால் கூடுமான வரை அடுத்தவர்களுக்கு பிரச்சனையாக இல்லாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. எனினும் நம் வாழ்க்கையில் நாம் அறியாமல் எவ்வளவோ பாவங்கள் கூட செய்திருப்போம். இத்தகைய பாவங்களில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பவுர்ணமி அன்று மிகவும் விசேஷமான பூஜைகள் எல்லாம் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதற்கு மிக முக்கிய காரணம் பவுர்ணமி தினங்களில் இறையாற்றல் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கும் என்பது தான். பௌர்ணமியில் இந்த பிரபஞ்சத்தின் உடைய சக்தி பல மடங்கு அதிகரித்து இருக்குமாம். இதனால் தான் பவுர்ணமி தினங்களில் செய்யப்படும் பரிகாரங்கள் பெருமளவு பலன் அளிக்கின்றன என்று நம்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஒருவருக்கு வாழ்க்கையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் வந்த வழியே சென்று கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? நாம் நமக்காக செய்யப்படும் சுயநலமான எந்த ஒரு விஷயமும் பன்மடங்கு பெருகுதில்லை. உங்கள் ஜாதக அமைப்பின்படி இருக்கும் பலன்களை மட்டுமே பெறுகிறோம். ஆனால் அதுவே மற்றவர்களுக்காக நாம் செய்யப்படும் எல்லா விஷயங்களும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். சுயநலம் இல்லாமல் பொது நலமாக பார்க்கும் விஷயங்களில் நீங்கள் கேட்க கேட்க குறையாத அளவிற்கு செல்வமும், பணமும் வந்து சேரும். ஒருவருக்கு மனமுவந்து நாம் செய்யும் தானம் நிச்சயம் நம்மை பல படிகள் மேல் நோக்கி கூட்டி செல்லும்.

eating-food

தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாக இருந்து வரும் பெருமைமிக்க விருந்தோம்பல் என்பது இன்று இல்லாமலேயே போய்விட்டது. விருந்தோம்பலில் பெயர் போன தமிழர்கள் அன்றைய காலகட்டங்களில் இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தது இல்லை. ஆனால் இன்று வீட்டிற்கு நமக்கு நெருங்கியவர்கள் வந்தால் கூட ஒரு வேளை சாப்பாடு போட யோசிக்கிறோம். இந்த சிந்தனை தான் நம்மை இன்னும் இன்னும் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டு செல்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தவர்களுக்கு கொடுத்து விட்டு நாம் சாப்பிடும் பொழுது தான் அந்த சாப்பாடு உண்மையில் அர்த்தமாகிறது. எனவே பவுர்ணமி தோறும் நாம் அன்னதானத்தை செய்வது நமக்கு அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுக்கும். உண்மையிலேயே பசியால் வாடும் ஏழை நபர்களுக்கு ஒரு வேளை உணவு பொட்டலத்தை வாங்கி கொடுத்தால் போதும்! அவர்கள் அதனை சாப்பிடும் பொழுது உங்களுடைய பாவங்கள் அனைத்தும் தீரும்.

annathanam

உங்கள் அருகில் இருப்பவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று யாராவது வறுமையில் வாடினாலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து தலைவாழை இலை விரித்து அறுசுவை உணவை படைத்து வயிற்றை நிரப்பி அனுப்பி வைத்தால் சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். பௌர்ணமி அன்று தானம் செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கக் கூடிய எண்ணற்ற பலன்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. நம்முடைய மனம் பெருந்தன்மையாக இருக்கும் பட்சத்தில் தான் நம்முடைய வாழ்க்கையும் பெருமைப்படும் விதத்தில் அமையும்.

இதையும் படிக்கலாமே
கொடுத்த கடன் 30 நாட்களில் வசூலாக இந்த சக்தி வாய்ந்த இலையில் அவர்களுடைய பெயரை எழுதி வைத்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -