கொடுத்த கடன் 30 நாட்களில் வசூலாக இந்த சக்தி வாய்ந்த இலையில் அவர்களுடைய பெயரை எழுதி வைத்தால் போதுமே!

poovarasan-leaf-cash

வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்பது ஒரு கவலையாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் கொடுத்த கடனை எப்படி வசூலிப்பது? என்கிற கவலையும் அதிகமாக தான் போய்க் கொண்டிருக்கிறது. கடனை வாங்கியவர்களை விட அதை கொடுத்தவர்களுக்கு வசூலிக்க முடியாமல் இருக்கும் பிரச்சனை தான் இன்று அதிகம். கடன் கொடுக்கிறார்கள் என்று வாங்கி வைத்து விடுவது, பின்னர் அதனைக் கட்ட முடியாமல் அவதிப்படுவது என்று ஒரு கூட்டமே உள்ளது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.

kadan

கட்டுவதற்கான தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதை கூட அறியாமல், யார் கடன் கேட்டாலும் வாரி வழங்கும் வள்ளல்கள் இருந்தால் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் அவதிப்பட வேண்டியது தான். தகுதிக்கு மீறி கடன் வாங்குவதும், தகுதி அறியாமல் கடன் கொடுப்பதும் தவறான செயலாகும். இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அவரவர்களின் நிலைக்கேற்ப யோசித்து முடிவெடுப்பது மட்டுமே இதிலிருந்து விடுபடுவதற்கு வழியாகும். இப்படியாக கொடுத்த கடனை வசூலிப்பதற்கு செய்யும் எளிய சக்தி வாய்ந்த் பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

இந்த ஒரு இலைக்கு வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் எழுதி வைக்கும் பெயரானது நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி வைக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கல் உப்பை முழுமையாக நிரப்பிக் கொள்ளுங்கள். பூவரசன் இலையை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பூவரசம் இலையில் எழுதப்படும் பெயர்களுக்கு அதீதமான சக்திகள் உள்ளது. நீல நிற மை அல்லது மார்க்கரால் நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களோ! யாரிடமிருந்து பணம் வர வேண்டுமோ! அவர்களுடைய பெயர்களை எழுதி வைக்கலாம்.

poovarasan-leaf

ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அதிக பட்சம் மூன்று நபர்களுடைய பெயரை மட்டுமே எழுத வேண்டும். கொடுத்த கடன் வசூல் ஆக வேண்டும் என்கிற வேண்டுதலை முன் வைத்து இலையை சுருட்டிக் கொள்ள வேண்டும். பின் அதனை அருகம்புல் கொண்டு இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த இலையை நீங்கள் நிரப்பி வைத்துள்ள கல் உப்பில் சொருகி வைக்க வேண்டும். சிறிதளவு உப்பை நீக்கி விட்டு இடையில் இந்த இலையை வைத்து மூடி விடுங்கள். இலை மேற்புறமாக சிறிதளவு தெரிய வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். இதனை வீட்டில் இருக்கும் நபர்களை தவிர வேறு ஒருவருடைய கண்களில் படாதவாறு பத்திரப்படுத்தி வையுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை இதிலிருந்து இலையை மட்டும் எடுத்து அதனை கசக்கி, கிழித்து யாருடைய கால்களிலும் படாத ஒரு இடத்தில் போட்டு விட வேண்டும். பின்னர் மீண்டும் பூவரசன் இலையை எடுத்து இதே போல நீல நிற வண்ணத்தால் பெயர்களை எழுதி சொருகி வைக்க வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வது நல்லது. எந்த நாள், எந்த கிழமையும் இதனை தாராளமாக நீங்கள் கடைபிடிக்கலாம். இந்த இலை செவ்வாய் பகவானுக்கு உகந்தது ஆகும்.

sevvai

மூன்று நபர்களுக்கு மேல் பெயர் எழுதினால் அவைகள் பலிப்பதில்லை என்பதனையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். 30 நாட்கள் அதாவது இரண்டு முறை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது உங்களுக்கு வராத பணம் சுலபமாக வசூல் ஆகி இருக்கும். அப்படி வசூல் ஆகாவிட்டால் மீண்டும் ஒரு முறை செய்து பாருங்கள். நிச்சயமாக விரைவாகவே நல்ல பலனை நீங்கள் காண்பீர்கள். கடன் கொடுத்தவர்களுக்கும், வாங்கியவர்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்த பரிகாரம் தீர்த்து வைக்கும் என்பது நியதி எனவே இதனை யார் வேண்டுமானாலும் தாராளமாக செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
செவ்வாய்க் கிழமையில் இந்த தீபமேற்றினால் நீங்களும் வறுமை நீங்கி கோடீஸ்வரர் ஆகிவிடலாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.