அட, முகத்துக்கு போடும் பவுடரை இதற்கெல்லாம் கூட பயன்படுத்தலாமா? இத்தனை நாட்களாக இந்த விஷயம் தெரியாமல் போய் விட்டதே!

powder
- Advertisement -

Tip 1:
உங்களுடைய வீட்டில் நீங்கள் முகத்திற்கு போடுவதற்கு எந்த பவுடரை பயன்படுத்தினாலும் சரி, அந்த பவுடரை பின் வரக்கூடிய குறிப்புகளுக்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிராண்ட், அந்த பிராண்ட் தான் வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. பெண்கள் எல்லோருமே கவரிங் நகைகளை பயன்படுத்துவார்கள். அந்த கவரிங் நகைகளை வெளியில் செல்லும் போது அணிந்து கொண்டு, வீட்டிற்கு வந்தவுடன் கழட்டி வைப்போம் அல்லவா.

gold

அந்த கவரிங் நகைகளை தண்ணீரில் கழுவி, வியர்வையை நீக்கினாலும் நகை சீக்கிரமே கறுத்துப் போகும். வியர்வையோடு அப்படியே எடுத்து டப்பாவில் போட்டு வைத்தாலும், நகை கறுத்துப் போகும். என்ன செய்வது. கவரிங் நகைகளை போட்டு வைத்திருக்கும் டப்பாவில் கொஞ்சமாக இந்த பவுடரைக் கொட்டி, நகைகளின் மீது லேசாக தூவி, அதன் பின்பு மூடி வைத்துவிடுங்கள். உங்களது வியர்வையை இந்த பவுடர் ஈர்த்துக் கொள்ளும். நீண்ட நாட்களுக்கு கவரிங் நகை ஜொலிக்கவும் செய்யும்.

- Advertisement -

Tip 2:
நம்முடைய வீட்டில் இருக்கும் பீரோ கண்ணாடி, டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி, ஜன்னலில் இருக்கும் கண்ணாடி இவைகளை என்னதான் சுத்தம் செய்தாலும் அது பளிச்சென்று இருக்காது. ஆனால், இதற்காக காசு கொடுத்து செலவு செய்து மிரர் கிளீனிங் எல்லாம் வாங்க வேண்டாம்.

mirror-clean

ஒரு காட்டன் துணியில் பவுடரை நன்றாக தொட்டு, அந்த பவுடரை வைத்து கண்ணாடி முழுவதையும் துடைத்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். மீண்டும் சுத்தமான ஈரமில்லாத ஒரு நல்ல காட்டன் துணியை வைத்து, கண்ணாடியை சுத்தம் செய்து விட்டாலே போதும். உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருட்கள் அனைத்தும் பளபளப்பாக மாறிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

Tip 3:
பெட்டின் மேல் உள்ள விரிப்பையும், தலைக்கு மேல் உள்ள தலையனை உரையையும், அடிக்கடி துவைத்தாலும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் ஒரு கெட்டவாடை வீசத் தொடங்கும். குறிப்பாக மழைக்காலங்களில், ஈரப்பதம் காரணமாக கெட்ட வாடை வீசும். வெயில் காலங்களில் நம்முடைய வியர்வை பட்டு கெட்டவாடை வீசும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பவுடரை பெட்டுக்கு மேல் கொட்டி, மேலே பெட் கவரை போட்டு கொள்ள வேண்டும். தலகாணி உரைக்கு உள்ளே பவுடரை கொட்டி அதன் பின்பு தலையணை உரையை போட்டால் வாசமாக இருக்கும்.

bedroom

Tip 4:
ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது மெல்லிய கட்சிப் அல்லது மெல்லிசான காட்டன் துணி இதில் பவுடரை கொட்டி நன்றாக மடித்து அலமாரிகள், துணி அடுக்கி வைத்திருக்கும் பீரோ, புத்தகம் அடுக்கி வைத்திருக்கக் கூடிய இடங்களில் ஒவ்வொன்று சொருகி வைத்தால், அந்த இடம் வாசனை நிறைந்த இடமாக இருக்கும். சிறு சிறு பூச்சிகள் கூட வராது. அசைவம் சமைக்கும் போது இந்த டிப்ஸை உங்கள் வீட்டு சமையலறை அலமாரியில் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

bero

Tip 5:
உங்கள் வீட்டு தீப்பெட்டிக்குள் கொஞ்சமாக பவுடரை கொட்டி வைத்தால் அந்தக் தீக்குச்சிகள் நமத்துப் போகாமல் நீண்ட நாட்களுக்கு புதுசு போலவே அப்படியே இருக்கும். எடுத்து பற்ற வைத்தவுடன் உடனடியாக நெருப்பு பிடிக்கும்.

dress

Tip 6:
எதிர்பாராத விதமாக உங்களுடைய புதிய ட்ரஸிலோ அல்லது பேப்பரின் மீது தெரியாமல் எண்ணெய் கொட்டி விட்டால், அதன்மேலே உடனடியாக இந்த பவுடரை தூவி விடுங்கள். எண்ணெய் கரையை சுலபமாக உறிஞ்சிக் கொள்ளும். அதன் பின்பு அந்த எண்ணெய் பட்ட இடத்தை தண்ணீரில் போட்டு அலசிக் கொண்டால் கரை இருந்த தடமே தெரியாது.

match-box

Tip 7:
நிறைய பேர் வீடுகளில் டூல்ஸ் பாக்ஸ் கட்டாயம் இருக்கும். சின்ன சின்ன ஸ்க்ரூட்ரைவர், ஆணிகள் இப்படிப்பட்ட பொருட்களை எடுத்து ஸ்டோர் செய்து வைத்திருப்போம். ஆனால் அது சீக்கிரமே துருப்பிடித்து விடும். இப்படிப்பட்ட இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ள டப்பாவில் கொஞ்சமாக பவுடரை கொட்டி வைத்தால் அந்த பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -