இந்த தண்ணீரை உங்களுடைய தலையில் இப்படி ஸ்ப்ரே செய்தால் போதும். வெறும் 10 நாட்களில் உங்களுடைய முடி பாதம் வரை தொடும்.

hair10
- Advertisement -

பாதம் வரை முடியா? பத்து நாட்களில் வளர்ந்து விடுமா? என்று ஆச்சரியப் படுகிறீர்களா. நம்பிக்கையுடன் எல்லா குறிப்புகளையும் முயற்சி செய்து வரும் போது ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்களுடைய முடி வளர்ச்சி நிச்சயமாக உங்கள் பாதத்தைத் தொடும். இந்த வெயில் காலத்தில் அதிவிரைவான முடி வளர்ச்சிக்கு தேவையான சுலபமான பவர்ஃபுல்லான ஒரு குறிப்பை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் ஊட்டச்சத்து தண்ணீரை தான் நாம் தயார் செய்யப் போகின்றோம். ஆனால் அந்த வெறும் தண்ணீர் நமக்கு பெரிய அளவில் நிறைய நல்ல பலன்களை கொடுக்க போகின்றது.

இந்த தண்ணீரை தயாரிப்பதற்கு நமக்கு 3 பொருள் தேவை. அரிசி, பாசிப்பயறு, வெந்தயம். ரேஷன் அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி எந்த அரிசியை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். 2 கைப்பிடி அளவு அரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

இன்னொரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நல்ல தண்ணீரை ஊற்றி அதையும் இரவு முழுவதும் ஊற வைத்துவிடுங்கள். இன்னொரு பௌலில் 2 கைப்பிடி அளவு பச்சைப் பயறு போட்டு தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள்.

இப்போது இந்த மூன்று பொருட்களும் நல்ல தண்ணீரில் 8 மணி நேரம் வரை ஊற வேண்டும். அதன் பின்பு இந்த பொருட்களை எல்லாம் அந்தத் தண்ணீரிலேயே நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி விடுங்கள். அவ்வளவு தான். நமக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த மூன்று பொருட்களின் சத்து நிறைந்த தண்ணீர் தயார். இதை தினந்தோறும் உங்களுடைய ஸ்கால்ப்பில் ஸ்பிரே செய்து வர வேண்டும்.

- Advertisement -

ஸ்ப்ரே செய்துவிட்டு இந்தத் தண்ணீர் உங்களுடைய தலையில் இறங்கும் வரை விரல்களை வைத்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு அப்படியே தலையில் இருக்கும் ஈரம் போகும் வரை உலர வைத்து விடுங்கள். தினமும் ஒருவேளை தான் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மூன்று முறை கூட இப்படி செய்து கொள்ளலாம்.

இந்த தண்ணீரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஏழு நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏழு நாட்கள் விடாமல் மேல் சொன்னபடி தலையில் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய முடி இருக்கும் அளவைவிட, இரண்டு இன்ச் அளவு வளர்ந்திருக்கும். தொடர்ந்து இந்த ஸ்ப்ரேவை 3 மாதங்கள் தலையில் ஸ்ப்ரே செய்து வர வழுக்கையாக இருக்கும் இடத்தில் கூட முடி வளர்ச்சியை நிச்சயம் காண முடியும்.

சளி பிடிக்கும் என்பவர்கள், உடல் குளிர்ந்த நிலையில் உள்ளவர்கள் கூட இந்த வெயில் காலத்தில், இந்த ஸ்பிரேவை பயன்படுத்தி பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பொதுவாகவே வெயில் காலத்தில் முடி வளர்ச்சிக்கு தேவையான குளிர்ச்சியான ரெமிடியை பின்பற்றி பார்ப்பது தான் சாமர்த்தியம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -