இன்று மாலை இந்தப் பூஜையை செய்தால், உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்காத ஏதோ ஒரு நல்லது நடப்பது உறுதி.

powrnami
- Advertisement -

நமக்கு வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகின்றோம். அந்த வரிசையில் நாளையதினம் புரட்டாசி மாத பௌர்ணமி. இந்தப் பௌர்ணமி நன்னாளில் எந்த தெய்வத்தை நினைத்து எந்த முறைப்படி, பூஜை செய்தால் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும் என்பதை பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pournami

நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய எந்த விஷயத்திலும் தோல்வி கிடையாது. நம்பிக்கையை மூலதனமாக வைத்து இந்த பூஜையை செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பாராத ஏதோ ஒரு நல்லது உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில நாட்களிலேயே நிச்சயம் நடக்கும்.

- Advertisement -

நாளை பௌர்ணமி தினம். பௌர்ணமி நாளில் நம்முடைய வீட்டில் எந்த பூஜையை செய்தாலும் அதன் மூலம் நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நாளை மகாலட்சுமியை நினைத்து தான் வீட்டில் பூஜை செய்ய வேண்டும். கட்டாயம் எல்லோரது வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும்.

mahalakshmi

மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். மகாலட்சுமிக்கு கட்டாயமாக ஒரு தாமரைப் பூவை வைக்க வேண்டும். அடுத்தபடியாக மகாலட்சுமிக்கு சுத்தமான ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில், பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அதில் ஏலக்காயை பொடி செய்து போட்டு கலந்து நைவேத்தியமாக வேண்டும். இதன் கூடவே ஒரு சிறிய கிண்ணத்தில், ஒரு சிறிய கட்டி வெல்லத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெள்ளத்தை என்ன செய்வது. என்று பதிவின் இறுதியில் பார்க்கலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுடைய கையில் உதிரி புஷ்பங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாரின் முன்பாக அமர்ந்து கொண்டு ‘ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

pournami

அடுத்தபடியாக மகாலட்சுமிக்கு தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். பூஜை முடிந்தவுடன் மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்த பாலை, வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக குறித்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமியிடம் மனமுருகி உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

pournami

இந்தப் பூஜையை குறிப்பாக மாலை 6.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் செய்து முடித்து விடுங்கள். சரி, பூஜையில் வைத்த வெல்லத்தை என்ன செய்வது. நாளை இரவு முழுவதும் அந்த வெல்லம் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.

Pournami days in Tamil Calendar

நாளை மறுநாள் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, மகாலட்சுமிக்கு மீண்டும் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய கஷ்டங்களில் ஏதாவது ஒரு தீராத கஷ்டம் இருக்கும் அல்லவா, அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மகாலட்சுமிக்கு பக்கத்தில் வைத்திருந்த வெல்லத்தை எடுத்து ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் உங்கள் கையாலேயே வெல்லம் கரையும் வரை, கரைத்து விட்டு விடுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையிலோ இந்த வெல்லத்தை தண்ணீரில் கரைக்க வேண்டும். அவ்வளவு தான்.

vellam

கஷ்டங்கள் அனைத்தும் அந்த வெல்லம் கரைவது போல காணாமல் போய் விடும். நீங்கள் எதிர்பாராத ஏதோ ஒரு நல்லது கூடிய விரைவில் உங்களுக்கு நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -