பிரச்சனைகள் தீர அம்பாள் வழிபாடு

amman4
- Advertisement -

சில சமயம் வீட்டில் பிரச்சனைகள் தீயாய் கொழுந்துவிட்டு எரியும். அதாவது தாங்க முடியாத கஷ்டத்தை, சண்டையை பேச்சு வழக்கில் இப்படி சொல்வது உண்டு. வீட்டில் பிரச்சனை ரொம்பவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது, தீ போல பிரச்சினை பற்றி எரிகிறது, இந்த பிரச்சினையில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் கடவுளே எனக்கு ஒரு வழியை காட்டு என்று இறைவனிடம் நாம் பிரார்த்தனை வைப்பது உண்டு.

சில சமயங்களில் நெருப்பிலிருந்து வெளிவரக்கூடிய அந்த அனலை கூட நம்மால் தாங்க முடியும். ஆனால் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளின் மூலம் வெளிவரக்கூடிய பாதிப்புகளை நம்மால் தாங்கவே முடியாது. சரி, குடும்ப பிரச்சினையிலிருந்து விடுபட என்னதான் தீர்வு. வீட்டில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் தலை விரித்து ஆடும் போது பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை வாங்கி தானம் கொடுங்க. உங்கள் பிரச்சனை சுலபமாக சரியாகிவிடும்.

- Advertisement -

குடும்ப சண்டைகள் தீர அம்மன் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் இருந்தால், மன நிம்மதி சீர்குலைந்து இருந்தால், அம்பாள் கோவிலுக்கு உடனடியாக உங்கள் கையால் ஒரு இளநீரை வாங்கிக் கொண்டு போய் தானம் செய்யுங்கள். தினமும் காலையில் கோவிலில் அபிஷேகம் நடக்கும் அல்லவா. அம்பாள் அபிஷேகத்துக்கு குளிர்ச்சி நிறைந்த இளநீர் தானம் கொடுத்தால், உங்க பிரச்சனை, உங்கள் வீட்டில் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை தனியும்.

சுத்தமான பன்னீர் வாங்கி அம்பாள் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு கொடுக்கலாம். பசும்பால் வாங்கி கொடுக்கலாம். இப்படி அம்பாளை குளிர்ச்சி செய்யக்கூடிய பொருட்களை வாங்கி தானம் கொடுப்பது உங்களுடைய குடும்ப பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை கொடுக்கும்.

- Advertisement -

மனிதர்களாக பிறந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சினை வருவது சகஜம் தான். ஆனால் சில நேரங்களில் ஆரோக்கியப் பிரச்சினை எல்லை மீறி போய்விடும். காய்ச்சல் 100 டிகிரியை தாண்டி கொதிக்கின்றது. எவ்வளவு மருந்து கொடுத்தாலும் குழந்தைக்கு குறையவில்லை எனும்போது நிச்சயம் தாய்மார்கள் பதறுவார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் கூட உங்கள் வீட்டில் உங்கள் கணவரையோ அல்லது உங்கள் உறவினர்களிடமோ சொல்லுங்க.

காலையில் அம்மன் கோவிலுக்கு ஒரு இளநீரை வாங்கிக் கொண்டு போய் தானம் செய்யச் சொல்லுங்கள். இளநீரை தானம் கொடுத்த உடனேயே உங்கள் குழந்தைக்கு நிச்சயம் அந்த காய்ச்சல் குறையும். இறை நம்பிக்கையில் செய்யக்கூடிய பரிகாரம் இது. நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் இதற்கு உண்டான பலனை நீங்கள் கைமேல் பெறுவீர்கள். சில பேர் விதாண்ட வாதம் பேசுவார்கள். அது எப்படி மருந்து குடித்தால் தான் காய்ச்சல் குணமாகும் என்று.

- Advertisement -

அவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் கிடையாது. மருந்தோடு சேர்த்து, நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரமும் செய்யணும். தேவைப்படுபவர்கள் இந்த பரிகாரத்தையும் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். அதே போல உங்கள் ஊரில், ஊரைக் காக்கும் மாரியம்மன், எல்லையம்மன் என்ற ஒரு தெய்வம் நிச்சயம் இருக்கும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு

அந்த கோவிலுக்கு வாரத்தில் ஒரு முறையோ மாதத்தில் இரண்டு முறையோ குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஊரைக் காக்கும் மாரியம்மன் உங்கள் குடும்பத்தை காக்கும் மாரியம்மன். அவளை வழிபட மறக்கக்கூடாது. உங்களால் முடிந்த பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு, அந்த அம்பாளை தரிசனம் செய்துவிட்டு வருவது உங்கள் குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -