தீராத பிரச்சினை தீர பரிகாரம்

prachanai theera
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் பிரச்சினை என்பது வரத்தான் செய்யும். அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய முயற்சிகளை நாம் எடுக்கத்தான் வேண்டும். அப்படி முயற்சிகளை எடுத்தும் அந்த பிரச்சினைகள் தீரவில்லை என்றாலோ அல்லது ஒரு பிரச்சனை முடிவதற்குள்ளாகவே மற்றொரு பிரச்சினை வந்து நம்மை ஆட்டிப்படைத்தாலோ அதிலிருந்து வெளிவர எந்த தீபத்தை எப்படி ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தீப வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. தீபம் எரியும் வீட்டில் எந்தவித எதிர்மறை சக்திகளும் இருக்காது என்று தான் கூற வேண்டும். அதனால் தான் நம் முன்னோர்கள் அன்றைய காலத்தில் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். நம்முடைய வாழ்வில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒவ்வொரு விதமான தீப வழிபாடு இருக்கிறது. அதேபோல்தான் இப்பொழுது தீராத பிரச்சினை தீர நாம் செய்யக்கூடிய தீப வழிபாட்டை பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். செய்யக்கூடிய நேரமானது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இருக்க வேண்டும். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நாம் தொடர்ந்து செய்யலாம். இந்த தீபம் நம் வீட்டில் எரிய எரிய நம் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும் என்பதால் தொடர்ந்து இந்த தீபத்தை நாம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரு அகல் விளக்கு தேவைப்படும். புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நம்முடைய உள்ளங்கை அளவிற்கு ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 27 என்ற எண்ணிக்கையில் கருப்பு குன்றின் மணியை வைத்து வெள்ளை நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் புதிதாக வாங்கி வைத்திருக்கும் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் இந்த குன்றின்மணி மூட்டையை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது விநாயகருக்கு ஒரு அருகம்புல்லை வைத்துவிட்டு “ஓம் கம் கணபதயே நமஹ” என்னும் மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு நம்முடைய பிரச்சினை என்னவோ அந்த பிரச்சினையை மனதார வேண்டிக் கொண்டு அந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது என்ற முழு நம்பிக்கையுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் விளக்கை ஏற்ற வேண்டும்.

இந்த விளக்கு எரிய எரிய கடைசியில் உள்ளிருக்கும் குன்றின்மணி வெடிக்க ஆரம்பிக்கும். இப்படி குன்றின்மணி வெடிக்கும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய பிரச்சினைகளும் வெடித்து ஒன்றும் இல்லாமல் சிதறிவிடும் என்பது சித்தர்கள் அருளிய வாக்காகும்.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வழிபாடு

நம்முடைய பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு அந்த பிரச்சினைகள் தீர வேண்டும் என்று முழு நம்பிக்கையுடன் மனதார இந்த தீபத்தை ஏற்றி வழிபட கண்டிப்பான முறையில் பிரச்சினைகளில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

- Advertisement -