இந்த சின்ன சின்ன விஷயங்களை தினம்தோறும் கடைப்பிடித்து வந்தாலே போதும். வாழ்க்கையில் பல பெரிய பெரிய முன்னேற்றங்கள் நம்மை தேடி வரும்.

sun

சுலபமான விஷயங்களை கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. இலவசமாக, சுலபமாக எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், எது நமக்கு சுலபமாக கிடைத்தாலும், அதை நம்முடைய மனது கட்டாயம் ஏற்காது. ஒரு சிறிய விஷயத்தை, சாதாரண மனிதர் சொல்லும்போது அந்த விஷயம் பெரிய அளவில் நன்மையை தந்தாலும், நமக்கு அதை கடைபிடிக்க வேண்டும் என்று தோணவே தோணாது. அதே சிறிய விஷயத்தை கொஞ்சம் உயர் நிலையில் உள்ளவர்கள், கொஞ்சம் மகான்களாக இருந்தால் அவர்களிடத்தில், பணம் கொடுத்து அந்த உபதேசத்தை நாம் வாங்கும் போது, அதே விஷயம் நமக்கு பெரியதாகத் தோன்றும். இது எல்லோருக்கும் உள்ள இயற்கையான ஒரு இயல்பு தான்.

sleep1

இதே போல் தான், நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நாம் செய்யவேண்டிய சுலபமான 2 விஷயங்களை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த இரண்டு சிறிய விஷயங்களை செய்து விட்டால், நாம் பணக்காரர் ஆகி விடுமா? கோடிஸ்வரர் ஆகிவிட முடியுமா? என்ற விதண்டா வாதங்கள் எல்லாம் பேசாமல் சற்று சிந்தித்துப் பார்த்து, இந்த 2 விஷயங்களை நாம் மேற்கொண்டால், நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்கள் எந்த அளவிற்கு குறைகின்றது என்று தெரியும். சரி இப்போது விஷயத்திற்கு செல்வோம்.

இரவு நாம் தலை வைத்து எந்த திசையில் படுத்தாலும் சரி. குறிப்பாக வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். சரி, அது வேறு விஷயம். நீங்கள் கண்விழித்து ஆகிவிட்டது. எழுந்து விட்டீர்கள். நீங்கள் எந்திரித்து முதலில் நீங்கள் எடுத்து வைக்க வேண்டிய 2 அடி கிழக்கு திசை நோக்கியவாறு இருக்க வேண்டும். முதலில் உங்களது கால்களை 2 அடி அல்லது 4 அடி, கிழக்கை நோக்கியவாறு எடுத்து வைத்து விட்டு, அதன் பின்பு நீங்கள் உங்கள் படுக்கை அறையை விட்டு வெளியே செல்லலாம்.

sleep

படுக்கை அறையை விட்டு வெளியே செல்லக் கூடிய வழி வேறு எந்த திசையை நோக்கி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது கால்கள் கிழக்கு திசையை நோக்கியவாறு தான், முதல் அடியை காலைநேரத்தில் எடுத்து வைக்கவேண்டும். இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது தென்மேற்கு திசையின் முக்கியத்துவம்.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பணப் பிரச்சனைக்கான தீர்வை தான் நாம் தேடிக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றோம். பணப்பிரச்சனை வந்த பின்பு அதற்கான தீர்வு. கடன் வாங்கிய பின்பு அதற்கான தீர்வு. பணம் கஷ்டம் வந்த பின்பு அதற்கான தீர்வு. இந்த கஷ்டத்தை எல்லாம் நமக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vasthu

கடன் வாங்கும்போது, கடன் கொடுக்கும்போது, பணம் சம்பந்தப்பட்ட எந்த பரிமாற்றத்தை செய்யத் தொடங்குவதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியில் கிளம்புவதற்கு முன்பு, நீங்கள் இறை வழிபாடு செய்தாலும் சரி, இறைவனை வேண்டிக் கொண்டாலும் சரி, பூஜை அறைக்கு சென்றாலும் சரி, செல்லவில்லை என்றாலும் சரி, தென்மேற்கு திசையை நோக்கியவாறு அந்த இறைவனை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டு, அதன் பின்பு உங்களது தினசரி வேலையை தொடங்குங்கள். பண பரிமாற்ற விஷயங்களை செய்யுங்கள்.

cash

முடிந்தால் பணத்தை அடுத்தவர்களிடமிருந்து வாங்கும்போது, தென்மேற்கு திசை நோக்கி வாங்குங்கள். பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுப்பதாக இருந்தால் தென்மேற்கு திசையை நோக்கி கொடுங்கள். தென்மேற்கு திசைக்கு அப்படிப்பட்ட ஒரு சக்தி உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றும் சக்தி இந்த தென்மேற்கு திசைக்கு உள்ளது. இந்த சுலபமான இரண்டு விஷயங்களை செய்து வந்தாலே பிரச்சனையிலிருந்து பாதி தப்பித்துக்கொள்ளலாம். அதன்பின்பு நன்மை, நம்மை தேடி வருகிறதா என்பது இரண்டாவது விஷயம். முதலில் பிரச்சினை வராமல் இருக்க  இந்த ரெண்டு டிப்ஸ ஃபாலோ பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள்