திருமாங்கல்யத்தில் செய்யக்கூடாத தவறுகள் மற்றும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்

thali
- Advertisement -

மந்திரம் ஓத, மேளதாளங்கள் வாசிக்க, பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கயிறு கட்டப்படுகிறது. இந்த தாலி கயிறு தான் கணவன், மனைவி இருவருக்குமான உறவிற்கு பாலமாக அமைகிறது. இந்த புனிதமான திருமாங்கல்யத்தை பெண்கள் எவ்வாறு முறையாக வழிபட்டு வருகிறார்களௌ அந்த அளவிற்கு அவர்களது கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்று நமது சாஸ்திர சம்பிரதாயங்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான திருமாங்கல்யத்தில் பலரும் தெரியாமல் சில தவறுகளை செய்கின்றனர். இதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகளும், மனக் குழப்பங்களும் ஏற்படுகின்றன. இவ்வாறு பெண்கள் செய்யக்கூடிய தவறுகள் பற்றியும், திருமாங்கல்யம் மாற்றும் பொழுது கவனிக்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Hindu Marriage

தாலிக்கயிறு அணியும் முறை: 1
கழுத்தில் அணியப்படும் தாலியை எப்பொழுதும் மற்றவரின் கண் பார்வையில் படுமாறு அணியக்கூடாது. புடவை அல்லது அணிந்திருக்கும் ஆடையின் உட்புறம் தான் தாலி கயிறு இருக்கவேண்டும். மற்றவர்களின் பார்வை தாலிக்கயிறின் மீது விழுவதினால் கணவன் மனைவி இருவருக்குமிடையே பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும்.

- Advertisement -

முறை: 2
வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே தாலிக்கயிறை புதியதாக மாற்றவேண்டும். நினைத்த நேரத்தில் எல்லாம் அடிக்கடி மாற்றக்கூடாது. அவ்வாறு தாலிக்கயிறை மாற்ற திங்கள், செவ்வாய், வியாழன் இவை மூன்று தினங்களும் சிறப்பு வாய்ந்த தினங்களாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் தாலி கயிறு மாற்றுவது அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்காது. ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றுவதனால் கணவரின் ஆயுளை அதிகரிக்கும் பலன் கொடுக்கிறது.

Thali Mangalyam

முறை: 3
வெள்ளிக்கிழமை தோறும் மாங்கல்யத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஆராதனை செய்ய வேண்டும். கழுத்தில் போடப்பட்டிருக்கும் மாங்கல்யம் நெஞ்சு குழிக்கு கீழே தொப்புள் இருக்கும் இடத்திற்கு சற்று மேலே இருக்குமாறு அமைந்திட வேண்டும். இவ்வாறு அணிவது தான் சரியான முறையாகும். சிலர் தொப்புளுக்கு நேராக அணிந்திருப்பார்கள் இவ்வாறு அணிவது சரியான முறையாகாது.

- Advertisement -

முறை: 4
திருமாங்கல்யக் கயிறு மாற்றும் பொழுது யார் கண் பார்வையிலும் மாற்றக்கூடாது. பூஜை அறையில் தனிமையில் அமர்ந்து தான் தாலி கயிறை மாற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கருவுற்றிருக்கும் பெண்கள் நிச்சயம் அந்த நேரத்தில் தாலி கயிறை மாற்றுவதென்பது கூடாது. அவ்வாறு செய்வது குடும்பத்திற்கு நன்மையை கொடுக்காது.

mangalyam1

முறை: 5
புது கையிறு மாற்றும் பொழுது காலை எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து, தாலிக்கயிறில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் கழற்றி விட்டு கயிறு மட்டும் கழுத்திலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு புது கயிறில் உருக்கள் அனைத்தையும் கோர்த்து கழுத்தில் போட்ட பின்பு பழைய கயிரை கழுத்திலிருந்து எடுக்க வேண்டும். எப்பொழுதும் நாம் போட்டிருக்கும் தாலிக்கயிறில் சிறிதளவாவது மஞ்சள்கயிறு இருப்பதென்பது மிகவும் அவசியமாகும். ஆனால் இப்பொழுதெல்லாம் சிலர் தாலியை முழுவதுமாக தங்கத்திலேயே அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு அணிவதனால் தாலி கயிறுகென்று இருக்கும் முழுவதுமான பலன் நமது குடும்பத்திற்கு கிடைப்பதில்லை.

- Advertisement -