- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் தீர

தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் தீர

- Advertisement -

பிரச்சனை இல்லாத வாழ்க்கையே கிடையாது. ஒரே பிரச்சினை தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே வந்தால் தான் அதனால் பல பாதிப்புகளுக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஒரு முயற்சியை செய்து கொண்டு இருக்கிறோம், அந்த முயற்சியில் வெற்றிகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். இருப்பினும் அதில் தோல்வியே சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பவர்களும், தொடர்ந்து பணக்கஷ்டத்தில் இருப்பவர்களும், தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் பச்சரிசி வைத்து இந்த முறையில் அமாவாசை தினத்தன்று பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கான வழிபாடு என்பது பலருக்கும் தெரியும். அதேபோல் குலதெய்வ வழிபாடும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அமாவாசையானது வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வருவது மேலும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நாம் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் சாபம் நீங்குவதோடு குலதெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையில் இருந்து நம்மை விடுவிக்கும். இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாது. வியாழக்கிழமை அன்று இரவே செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று இரவு மஞ்சள் அல்லது பச்சை அல்லது சிவப்பு நிறத்திலான துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

நேராக உங்கள் வீட்டு சமையல் அறைக்கு சென்று உங்களுடைய இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து பச்சரிசியை எடுக்க வேண்டும். எவ்வளவு பச்சரிசி வருகிறதோ அவ்வளவும் எடுத்து அப்படியே அந்த துணியில் வைத்து அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். அந்த அளவிற்கு வீட்டில் பச்சரிசி இல்லை என்று நினைப்பவர்கள் சாப்பாட்டு அரிசியை கூட எடுத்து வைக்கலாம்.

- Advertisement -

இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய குலதெய்வத்தின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அதாவது அமாவாசை நாள் முழுவதும் இந்த மூட்டை அப்படியே உங்கள் குலதெய்வத்தின் பாதத்திலேயே இருக்கட்டும். சனிக்கிழமை அன்று காலையில் இந்த மூட்டையை எடுத்து அதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாயை கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

அந்த அரிசியை ஆதரவற்றவர்களுக்கோ, வறுமை கோட்டில் இருப்பவர்களுக்கோ தானமாக தரவேண்டும். அப்படி யாரும் அருகில் இல்லை என்று நினைப்பவர்கள் பசு மாட்டிற்கு தானமாக தந்துவிடலாம். இந்த முறையில் நாம் பச்சரிசியை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்குவதோடு அவர்களின் ஆசீர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் குலதெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்கும். கர்ம வினைகள் நீங்கும். இதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே குலதெய்வத்தை கண்டுபிடிக்க பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கையுடன் செய்து பலன் நடையுங்கள்.

சற்று முன்