- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வத்தை கண்டுபிடிக்க பரிகாரம்

குலதெய்வத்தை கண்டுபிடிக்க பரிகாரம்

- Advertisement -

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்தை எந்த முறையில் வழிபட வேண்டுமோ அந்த முறையில் வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இப்படி வழிபட்டால் தான் நம்முடைய குலமானது வாழையடி வாழையாக தழைத்து ஓங்கும். நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வம் இது என்று தெரிந்தவர்கள் அந்த குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். ஒரு சிலருக்கு குலதெய்வம் எது என்று தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய குலதெய்வத்தை தெரிந்து கொள்வதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் தான் குலதெய்வம் இருக்கும் என்று கூறுவார்கள். பலரும் அவர்களுடைய குலதெய்வத்தை கண்டறிந்து அந்த குலதெய்வத்திற்குரிய முறையான வழிபாட்டு முறைகளை பின்பற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித பிரச்சனைகளும் இருக்காது. அதையும் மீறி பிரச்சனைகள் வந்தாலும் அந்தப் பிரச்சினைகளை சரி செய்வதற்குரிய வழிகளை குலதெய்வம் காட்டும். மேலும் மற்ற தெய்வங்களுடைய அருளையும் குலதெய்வமானது நமக்கு பெற்றுத் தரும். அதனால் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அப்படிப்பட்ட குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஒரு குத்துவிளக்கு வேண்டும். குத்து விளக்கை வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் அந்த குத்துவிளக்கில் எண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு ஐந்து முகத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு அந்த குத்து விளக்கிற்கு மஞ்சள் துணியை கட்டி அதற்கு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

குத்துவிளக்கு முன்பாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், சர்க்கரை பொங்கல் இவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு அந்த குத்து விளக்கு இடம் “எங்களுடைய குலதெய்வம் எது என்று எங்களுக்கு தெரியாது. அதனால் குலதெய்வ வழிபாடு செய்ய இயலாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். இந்த பூஜையை மனதார ஏற்றுக் கொண்டு எங்களுடைய குலதெய்வம் எது என்று எங்களுக்கு காட்ட வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் குத்து விளக்கு பூஜை செய்து இப்படி வழிபாடு செய்வதன் மூலம் ஏதாவது ஒரு ரூபத்தில் குலதெய்வத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியும். அடுத்ததாக நம்முடைய வீட்டில் குலதெய்வம் வீற்றிருக்கக் கூடிய ஒரு முக்கியமான இடமாக கருதப்படுவது தான் நம்முடைய வீட்டு நிலை வாசல்.

- Advertisement -

அதனால் நம்முடைய வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வெற்றிலை பாக்கு, மலர்கள் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதை தினமும் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் செய்யலாம். உங்களுடைய குலதெய்வம் எதுவாக இருந்தாலும் இந்த முறையில் நிலை வாசலுக்கு நீங்கள் பூஜை செய்வதன் மூலம் உங்களுடைய குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற முடியும். மேலும் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் குலதெய்வம் எது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: 05-07-2024 வெள்ளிக்கிழமை அமாவாசை வழிபாடு

மிகவும் எளிமையான இந்த இரண்டு வழிபாட்டு முறைகளையும் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையும் பின்பற்றி உங்களுடைய குலதெய்வம் எது என்பதை அறிந்து குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெறுங்கள்.

சற்று முன்