- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval04-06-2924 பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய நரசிம்மர் வழிபாடு.

04-06-2924 பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய நரசிம்மர் வழிபாடு.

- Advertisement -

பிரதோஷ நாளில் சிவபெருமானை தானே வழிபாடு செய்வார்கள். ஆனால் நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பது சரியா, என்று நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும். சரிதான். பிரதோஷ நாள், பிரதோஷ நேரம் என்பது சிவபெருமானுக்கு மட்டும் கிடையாது. பெருமாளுக்கும் உரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பெருமாளின் அவதாரமான நரசிம்மருக்கு மிக மிக முக்கியமான நாள், இந்த பிரதோஷ நேரம். காரணம் நரசிம்மர் அவதாரம் எடுத்தது பிரதோஷ நேரத்தில் தான். சாயங்கால நேரத்தில் நரசிம்மர் அவதாரம் எடுத்து, பிரகலாதனை காப்பாற்றிய கதை நாம் எல்லோரும் அறிந்ததே.

- Advertisement -

இதன் அடிப்படையில் இந்த பிரதோஷ நேரத்தில் நம் கஷ்டங்கள் தீர வேண்டும் என்றால், நரசிம்மரை எப்படி வழிபாடு செய்வது, எந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதோஷம் வரவிருக்கின்றது. செவ்வாய்க்கிழமை கடனை தீர்ப்பதற்கு உகந்த நாள் என்பதால் நாளை மாலை, சிவன் வழிபாட்டோடு சேர்த்து இந்த நரசிம்மர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நரசிம்மரை மனதார நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜையறையில் சாயங்காலம் 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நரசிம்மரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கடன் சுமை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கடன் சுமை அல்லாது, குடும்பத்தில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதை சொல்லியும் பிரார்த்தனை செய்யலாம். நரசிம்மர் உடனடியாக அந்த பிரார்த்தனையை தீர்த்து வைப்பார்.

ஏனென்றால் நரசிம்மருக்கு நாளை என்பது கிடையாது. இன்றே, இப்போதே நீங்கள் கேட்ட வரங்களை கொடுக்கும் சக்தி நரசிம்மர் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கிறது. பிரார்த்தனையை வைத்துவிட்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை உச்சரியுங்கள். பிறகு ஏதாவது ஒரு நெய்வேதியம் அல்லது நீர் மோர் பானகம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நரசிம்மர் மந்திரம்

ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச

இதையும் படிக்கலாமே: குடும்பத்திற்கு நல்லது நடக்க பரிகாரம்

இந்த நான்கு வரி மந்திரம் தான்.  நரசிம்மரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்