நம்முடைய வழிபாட்டு முறைகளில் நாள், திதி, நட்சத்திரம் என அனைத்திற்கும் எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. இவற்றின் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாளையும் நாம் ஒவ்வொரு கடவுளுக்காக பிரித்து வழிபாடு செய்கிறோம் அப்படி இருக்கையில் வழிபாட்டிற்குரிய திரிகளும் நட்சத்திரங்களும் ஒரே நாளில் இணைந்து வருவது அரிதாக நிகழும் அப்படியான ஒரு நாள் தான் இன்றைய திங்கட்கிழமை.
இந்த நாளில் நாம் சொல்லும் ஒரு மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முறையில் திசை மாற்றிக் கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் அது மட்டும் அன்று வேறு சில பரிகாரங்களையும் இன்றைய தினத்தில் செய்யும் போது குடும்பத்திற்கு சகல விதமான நன்மைகளும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
குடும்பத்திற்கு சகல விதமான நன்மைகளும் கிடைக்க
இன்றைய நாள் மிக முக்கியமான நாள் என்று சொல்வதற்கு காரணம் இன்றைய நாளில் ரேவதி, அஸ்வினி, பரணி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் ஒன்றாக இணைந்து வந்திருக்கிறது. அது போல ஏகாதிசி, துவாதிசி, துரியோதசி ஆகிய மூன்று திதிகளும் இன்றைய நாளில் ஒன்றின் பின் ஒன்றாக தொடர்ந்து ஒரே நாளில் வந்திருக்கிறது.
இது வழிபாட்டிற்கும் நம்முடைய குடும்ப முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியமானதொரு நாளாக கருதப்படுகிறது. ஆகையால் இன்றைய நாளில் சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்வது மிக மிக நல்லது என்று சொல்லப்படுகிறது. திங்கட்கிழமையானது சிவனுக்கே உரிய நாள் அந்த நாள் அவருக்கே உரிய திதியான திரியோதிசி திதியும் இணைந்திருப்பதால் அதிக நன்மையை பயக்கும்.
அடுத்து இன்றைய நாளில் 308 வரை சிவாய நமக என்ற இந்த நாமத்தை சொல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் ஆலயத்தில் அமர்ந்து சொல்லுங்கள் முடியாதவர்கள் வீட்டிலே அமர்ந்தும் இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம். இத்துடன் வீட்டில் லிங்கம் வைத்து வழிபாடு செய்பவர்கள் ஒரு சில அபிஷேகங்களை செய்வது சிறந்தது. அது எந்த விதமான லிங்கமாக இருந்தாலும் பரவாயில்லை.
அந்த லிங்கத்திற்கு இன்று பால் அபிஷேகம் மற்றும் வில்வ இலை சேர்த்த தண்ணீர் அபிஷேகம் செய்வது அத்தனை பலன்களை நமக்குப் பெற்றுத் தருவதாக அமைகிறது வாய்ப்பு உள்ளவர்கள் இதை இன்றைய தினம் தவறாமல் செய்து பலன் அடையுங்கள். இத்துடன் இன்றைய நாளில் நான்கு பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். இது உங்களுடைய கர்மாக்களை குறைத்து நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
இதையும் படிக்கலாமே: 06-06-2024 அன்று செய்ய வேண்டிய அமாவாசை பரிகாரம்
இன்றைய நாளில் நாம் செய்யக் கூடிய வழிபாடுகள் பரிகாரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இவைகளை பின்பற்றும் பொழுது நிச்சயம் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.