தல தோனியின் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் – இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் தோனி. கடந்த 2005ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆன தோனி கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய அணியின் ஆல் டைம் பெஸ்ட் பினிஷர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

dhoni

உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தை உடையவர் தோனி. இந்திய அணிக்காக பல ஆண்டுகள் கேப்டன்சி செய்த இவர் ஐ.சி.சி-யின் அனைத்து கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்த ஒரே கேப்டன் இவர்தான் என்ற பெருமையும் தோனிக்கு உண்டு.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழுத்தலைவர் பிரசாத் கூறியதாவது : தோனி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர் ஆவார். அவரின் வழிகாட்டுதல் இந்த உலககோப்பைக்கு நிச்சயம் அவசியம். அவரின் அனுபவம் இந்திய அணி கேப்டன் கோலிக்கும், இளம் வீரர்களுக்கும் நிச்சயம் கைகொடுக்கும் என்ற நான் நம்புகிறேன். அவரின் ஓய்வு முடிவு அவர் கைகளிலே உள்ளது.

msk

உலகக்கோப்பை தொடருக்கு பின் அவருக்கு வயது 38 யை நெருங்கும். இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் அவரது இடத்திற்கு காத்திருப்பதால் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று அதனை தொடர்ந்து தோனி தனது ஓய்வு முடிவினை அறிவிப்பார். மேலும்,இப்போதைக்கு ஒன்று மட்டுமே அவசியம் தோனியை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என்பதே என்று பிரசாத் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

அதிர்ச்சி செய்தி : படுகாயம் அடைந்த ரெய்னா. சுரேஷ் ரெய்னாவிற்கு கார் விபத்து ஏற்பட்டது. – காரணம் என்ன

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -