கோயிலில் கொடுக்கப்படும் குங்கும பிரசாதத்தை இனி தெரியாமல் கூட இப்படி செய்து விடாதீர்கள். அதிர்ஷ்டம் போய்விடுமாம்!

temple-kumkum

வழக்கமாக அனைத்து கோவில்களிலும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களும் கொடுப்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒரு நடைமுறை ஆகும். இவற்றை பக்தியுடன் வாங்கி நெற்றியிலும், கழுத்திலும் இட்டுக் கொள்வதால் பிரார்த்தனை நிறைவு பெறுவதாக ஐதீகம் உள்ளது. இப்போது பெரும்பாலான கோவில்களில் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களும் வீணடிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மேலும் வீட்டில் அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டியவை என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

kungumam

கோவில்களில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமம், மஞ்சள், எலுமிச்சை பழம், பூக்கள் போன்றவற்றை தெரியாமல் கூட அங்கேயே வைத்துவிட்டு வரக்கூடாது. இதனால் தோஷங்கள் ஒன்றுமில்லை, ஆனால் உங்களுக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டங்கள் போய்விடுமாம். எவரொருவர் இல்லத்தில் கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை வாங்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கப்படுகின்றதோ அந்த வீட்டில் செல்வ செழிப்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். மன நிம்மதியும் நிச்சயம் நீடித்து இருக்குமாம். அதனால் இப்படி கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படுகிற பொருட்களை வீணடிக்காமல் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வையுங்கள்.

மேலும் ஒருவர் வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருக அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது நல்ல வாசனை வீச வேண்டும். வீட்டை எப்போதும் கமகமவென வாசனை திரவியங்கள் பயன்படுத்தி வாசனையோடு வைத்துக் கொள்ளுங்கள். அல்லது தெய்வீக மணம் கமழும் இயற்கை வாசனை பொருட்களை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

pachai-karpooram1

அத்தர், ஜவ்வாது, பச்சை கற்பூரம், பன்னீர், புனுகு போன்றவை இயற்கையிலேயே மணம் மிக்க அதிக தெய்வ சக்தி உள்ள பொருட்கள் ஆகும். இவைகளை எப்பொழுதும் உங்கள் வீட்டில், பூஜை அறையில் வைத்து கொள்வதால் வீடு முழுக்க கமகமவென்று மணம் கமழும். இப்படி வீடுகள் இருந்தால் நிச்சயம் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

- Advertisement -

நம் வீட்டில் எப்பொழுதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துடைத்து சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தரையைத் துடைத்து சுத்தமாக வைத்து இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் செல்வ தடை ஏற்படாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

clean

இந்த நாளில் பெண்கள் தலைக்கு குளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தால், அவர்களுக்கு மன அழுத்தம் குறையும். இப்போது இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தாய்மார்கள் கூறுவது போல தொடர்ந்து தலைக்கு குளித்துப் பாருங்கள் நிச்சயம் உங்களிடம் மாற்றம் தெரியும்.

oil bath

வீட்டில் எப்பொழுதும் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் அந்த வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும், அனைத்து விதமான வளங்களும் நிரம்பியிருக்கும். அபசகுனமான வார்த்தைகளும், கெட்ட வார்த்தைகளையும் அடிக்கடி உபயோகப்படுத்தும் இல்லத்தில் எதிர்மறை ஆற்றல் பெருகும். இதனை எந்த அளவிற்கு நீங்கள் தவிர்த்துக் கொள்கிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களுடைய பிரச்சனைகளும் தீரும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
தூங்கும் போது உங்கள் அருகில் இந்தப் பொருட்கள் இருந்தால் நிச்சயம் பணகஷ்டம் தான் வரும். ஏன்னு நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.