தூங்கி விழித்ததும் இந்த மந்திரம் சொன்னால் நீங்கள் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும்!

wakeup-mantra

சில மந்திரங்கள் நாம் நினைத்தவற்றை நினைத்தவாறே முடிப்பதற்கு உதவி புரிகின்றன. அந்த வகையில் இந்த மந்திரம் அன்றைய நாள் முழுக்க நமக்கு நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து தரும். நமது முன்னோர்கள் வழிவழியாக இந்த மந்திரத்தை காலையில் எழுந்திருக்கும் பொழுதே உச்சரித்து விட்டு அதன்பிறகு எழுந்திருப்பார்கள். நாம் எழுந்ததும் நம்முடைய கால்கள் தரையில் படுவதற்கு முன்பு இந்த மந்திரத்தை உச்சரித்து விடவேண்டும். பூமாதேவியை நினைத்துக் கொண்டு அவள் திருவடியை சரண் அடைந்து மன்னிப்பு கோருவது போல் அமைந்திருக்கிறது இந்த மந்திரம். பூமித் தாயின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, நம் எண்ணங்கள் ஈடேற இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம். இதை ‘ப்ராதஸ்மரணம்’ என்று கூறுவதுண்டு.

thiyanam-mantra

ப்ராதஸ்மரணம் மந்திரம்:
”ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே,
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே!!”

இந்த மந்திரத்தின் பொருள் என்னவென்றால், சமுத்திரத்தையே தன் ஆடையாக உடுத்தியிருக்கும் பூமாதேவியே, என் பாதத்தை உங்கள் மீது வைத்து இன்று நான் எழுகின்றேன். தயவு செய்து என்னை மன்னித்து, பொறுத்துக் கொண்டு எனக்கு அருள் புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்பதாகும்.

booma-devi

நாம் காலையில் எப்பொழுதும் எழுந்திருக்கும் பொழுது உள்ளங்கையை பார்த்து எழுந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அது ஏன் தெரியுமா? நமது உள்ளங்கையின் நுனி பாகத்தில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதி தேவியும், அடிப்பகுதியில் மகாவிஷ்ணுவும் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாம் எழுந்த பின் முதல் வேலையாக இவர்களை தரிசனம் செய்த பிறகு நம்முடைய அன்றாட பணிகளை தொடங்கினால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புதிய தெம்புடன் இனிய நாளாக நமக்கு அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனை பறைசாற்றும் விதமாக கீழ்கண்ட மந்திரம் அமைந்திருக்கிறது. மேற்கூறிய மந்திரத்தை உச்சரித்ததும், இந்த மந்திரத்தையும் சேர்த்து உச்சரியுங்கள் கூடுதல் பலன் கிட்டும்.

- Advertisement -

hand

கரதர்சன மந்திரம்:
கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே ஸரஸ்வதி!
கரமூலே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்!!

இதையும் படிக்கலாமே
பண வரவுக்காக எந்த மந்திரம் சொன்னாலும் பலன் அளிக்கவில்லை! உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனை என்ன? எந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Morning mantra after wake up. Morning wake up mantra. Morning mantra Tamil. Morning mantra for success. Thinamum solla vendiya manthiram.