- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளைய தினம் பெண்கள் இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றினால், உங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்....

நாளைய தினம் பெண்கள் இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றினால், உங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும். நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும்.

- Advertisement -

நிறைய பேர் தன்னுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கவே மாட்டேங்குது, அப்படி என்று சொல்லி கஷ்டப்படுகிறார்கள். அப்படி கிடையாது. மூன்று வேளை சாப்பிடுகின்றோம். உடுத்துவதற்கு நல்ல துணி இருக்கிறது. இருக்க ஒரு இடம் இருக்கிறது. நல்ல கணவர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல உறவுகள் என்று, இரண்டு கை, இரண்டு கால்கள், இரண்டு கண்கள் என்று ஆரோக்கியமாக சந்தோஷமாகத்தான் வாழ்கின்றோம். இது நிறைவான வாழ்க்கை. கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் நல்ல வாழ்க்கை. இது நல்லது கிடையாதா. பிறகு எதை தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும் நல்ல வாழ்க்கை தான் அதில் எந்த குறைபாடும் கிடையாது.

சரி, ஒரு சில விஷயங்கள் நல்லதாக நடக்க வேண்டும். சில முயற்சிகளை, பல நாட்களாக மேற்கொண்டு இருக்கின்றோம். அதற்கான நல்ல செய்தி வருவதற்கு தாமதம் ஆகிறது. சீக்கிரம் அந்த நல்லதை எல்லாம் வீடு தேடிக் கொண்டு வர வைக்க ஏதாவது ஆன்மீகத்தில் வழி உண்டா. நல்லதே நம் வீடு தேடி சீக்கிரம் வர வைக்க ஒரு வழிபாடு உள்ளது.

- Advertisement -

நல்லது நடக்க பிரதமையில் ஏற்ற வேண்டிய தீபம்:
நாளைய தினம் அமாவாசை முடிந்த அடுத்த நாள். பிரதமை திதி தொடங்கவிருக்கின்றது. நாளை 10:25 க்கு அமாவாசை திதி முடிந்து பிறகு பிரதமை திதி தொடங்கும். அப்போது உங்களுடைய வீட்டில் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். வழக்கம்போல காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். நாளை (18.06.2023) காலை 11.00 மணி அளவில் வீட்டில் பூஜையறையில் குலதெய்வத்தை நினைத்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வழக்கம்போல தினமும் நல்லெண்ணெய் ஊற்றி எப்படி விளக்கு ஏற்றுவீர்களோ அதே விளக்கை ஏற்றி வைக்கலாம்.

அந்த விளக்கிற்கு முன்பாக அமர்ந்து நீங்கள் மனதில் நினைத்திருக்கும் அந்த நல்ல செய்தி எதுவோ, அது சீக்கிரம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும். இந்த வழிபாட்டை மனநிறைவோடு ஒரு பத்து நிமிடங்கள் செய்யுங்கள். பூஜை அறையில் எரியும் விளக்கு 12 மணி வரை கூட எரியலாம். தவறு கிடையாது. உங்கள் வழிபாட்டை நம்பிக்கையோடு பத்து நிமிடம் இறைவனின் பாதங்களில் வைத்து விட்டு பிறகு நீங்கள் வழக்கம் போல உங்களுடைய வேலையை செய்யலாம்.

- Advertisement -

அமாவாசை முடிந்த பின்பு பிரதமை திதி தொடங்கும் நேரத்தில் விளக்கு ஏற்றி நீங்கள் என்ன வழிபாடு செய்கிறீர்களோ, என்ன வேண்டுதல் வைக்கிறீர்களோ அதற்கு உண்டான பலன் மிக மிக சீக்கிரமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா. ஆண்கள் செய்யக்கூடாதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். பெண்களால் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை, பெண்கள் வீட்டில் இல்லை எனும் பட்சத்தில் ஆண்களுக்கு இருக்கும் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள ஆண்களுக்குகும் நல்ல செய்தி வர, அவர்களும் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் லஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்க எந்த பூஜை புனஸ்காரங்களையும் செய்யத் தேவையில்லை இதை மட்டும் செய்தாலே போதும். மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்து ஐஸ்வர்யங்களை அள்ளித் தருவார்.

உங்களுடைய வீட்டில் பெண்கள் இருந்தால் அவர்கள் கையால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஆண்களாகிய நீங்கள் அந்த விளக்குக்கு முன்பு அமர்ந்து வேண்டுதல் வைக்கலாம். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். நல்ல மேல் படிப்பு படிக்க வேண்டும். நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும். என்றெல்லாம் நிறைய பேருக்கு ஆசை இருக்கும். அதற்கான முயற்சிகளும் மேற்கொண்டு இருப்பார்கள் ரிசல்ட் வர லேட் ஆகும். அந்த நல்ல செய்தி வீடு தேடி வருவதற்கும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்