வீட்டில் லஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்க எந்த பூஜை புனஸ்காரங்களையும் செய்யத் தேவையில்லை இதை மட்டும் செய்தாலே போதும். மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்து ஐஸ்வர்யங்களை அள்ளித் தருவார்.

mahalakshmi wakeup
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் மகாலட்சுமி தாயார் தங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய பூஜை புனஸ்காரங்கள் பரிகார முறைகளை தேடி தேடி பார்த்துக் செய்கிறோம். ஆனால் ஒரு சில விஷயங்களை நாம் சரியாக செய்தாலே மகாலட்சுமி தாயார் நம்முடைய இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வார் என்று ஆன்மீகம் ஆணித்தரமாக சொல்கிறது. அது என்ன என்பதை குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்ய பெண்கள் செய்ய வேண்டியது
மகாலட்சுமி தாயார் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அந்த வீட்டு இல்லத்தரசிக்கு தான் உள்ளது. இல்லத்தரசி என்றாலே அந்த இல்லத்தின் உடைய அரசி என்பது தான் பொருள். அதே போல ஒவ்வொரு வீட்டிற்கும் அந்த வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி தான் மகாலட்சுமி எனவே அவர்கள் கையில் தான் இதற்கான பொறுப்பு உள்ளது.

- Advertisement -

பெண்கள் தினமும் காலையில் சீக்கிரம் எழுவதை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்று ஆகம நியதிகள் சொல்கிறது. காலையில் 6:00 மணிக்கு முன்பாக எழுந்து விளக்கு ஏற்றும் வீட்டில் மகாலட்சுமி தாயார் அழைக்காமலே வருவார் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் எழுந்தவுடன் நேராக சமையலறை மற்ற இடங்களுக்கும் செல்லாமல் குளிக்க வேண்டும். முடியாதவர்கள் கை, கால், முகமாவது அலம்பி தலையை வாரி பொட்டு வைத்த பிறகு தான் படுக்கை அறையிலிருந்து வெளியில் வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதன் பின் தான் வாசல் தெளித்து கோலம் போடுவது சமையலறையில் வந்து சமைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

அதே போல் சமையலறை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும். ஒரு வீட்டில் பூஜையறைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். சமையலறை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அங்கு தான் அன்னபூரணி தாயாரின் வாசம் பரிபூரணமாக இருக்கும். இதனால் குடும்பத்தில் கஷ்டம் என்ற பேச்சை வராது. அதே போல் பெண்கள் முதலில் அடுப்பை பற்ற வைத்தும் செய்யும் முதல் வேலை பாலை காய்ச்சுவதாகத் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

சுவாமிக்கு தினமும் நெய்வேத்தியத்திற்கு எதையும் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை, நீங்கள் காய்ச்சும் பாலில் ஒரு டம்ளர் எடுத்து சர்க்கரை போட்டு சாமி படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வைத்து விட்டாலே போதும். இதற்கென நீங்கள் தனியாக பூஜை புனஸ்காரங்கள் செய்ய வில்லை என்றாலும் இதை செய்தாலே மகாலட்சுமி தாயார் உங்கள் வீட்டை விட்டு போகாமல் நிரந்தரமாக உங்களுடன் இருப்பார்.

வீட்டில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும். குழந்தைகளை திட்டும் பொழுது கூட அபசகுனமான வார்த்தைகளையோ சனியன், தரித்திரம் போன்ற வார்த்தைகளில் பயன்படுத்தி திட்ட கூடாது என்பதோடு நாமும் பேசக் கூடாது. அதிலும் காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் செயலும், பேசும் பேச்சும் தான் நம் குடும்பம் எந்த நிலைமைக்கு செல்லும் என்பதை தெளிவுபடுத்தும். விளக்கு ஏற்றும் போது பெண்களின் மனதில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் எப்போதும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், லட்சுமி கடாட்சத்துடனும் இருக்க வேண்டும் என்று நினைத்தபடி ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை உள்ளம் உருகி பெருமாளுக்கு இந்த ஒரு பொருளை நிவேதினமாக வைத்து வழிபாடு செய்தால், நிறைய நிறைய பணம் சேரும்.

இந்த சின்ன சின்ன விஷயங்களை சரியாக கடைப்பிடித்தாலே போதும். அந்த குடும்பத்தில் எப்பொழுதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து, குடும்பம் என்றென்றைக்கும் செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தகவல்களில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் இது போல செய்து உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

- Advertisement -