பிரதோஷ விரதம் இருப்பது எப்படி ?

Prathosam
- Advertisement -

பிரதோஷ நாள் என்பது சிவனை பழிப்பட சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை நந்தி தேவர் தன்னுடைய தவத்தை களைத்து சிவனை நோக்கி விரதம் இருப்பவர்களின் கோரிக்கையை கேட்டு அதை நிறைவேற்றுவார். பல சிறப்புகள் மிக்க பிரதோஷ விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

sivan

பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம். நேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம்.

- Advertisement -

மாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வளம் வந்து விரதத்தினை முடிக்கலாம்.

பிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பிரதோஷம் நாட்கள் 2018 – மாதம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது

English overview:

This article explains about how to follow prathosam viratham in tamil. Prathosam is a good day to worship lord Shiva. If one follow pradhosam viratham then he will get good benefits. In prathosam days one can chant prathosam slokam in tamil.

- Advertisement -