விராட் கோலியை மட்டுமே டார்கெட் செய்வது தவறு. இந்த ஜோடி கோலியை விட ஆபத்தானது – ராஸ் டெய்லர்

ross-taylor

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க நியூசிலாந்து சென்றடைந்துள்ளது. இரண்டு அணிவீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . வரும் ஜனவரி 23ஆம் தேதி போட்டிகள் துவங்கி பிப்ரவரி 3ஆம் தேதி முடிகிறது. மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது இந்திய அணி.

indian-team

வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து கோலி ரன்களை குவித்து வருவதால் அனைத்து நாடுகளும் விராட் கோலியின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால் இந்திய அணியை தோற்கடிக்க முடியும் என்று வியூகம் வகுத்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஆனால், நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் தற்போது இந்திய அணிக்கு எதிரான தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

ராஸ் டெய்லர் பேசுகையில் : கடந்த பல தொடர்களில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டி வருகிறது. இதனால் இந்திய அணி தற்போது பலமான நிலையில் உள்ளது. அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். பல அணிகளும் கோலியை மட்டுமே டார்கெட் செய்து வருகின்றன. எங்களது அணியும் அவரை டார்கெட் செய்வதாக நினைக்கிறன் .

rohith dhawan

ஆனால், அவரை மட்டும் டார்கெட் செய்யாமல் இந்திய அணியின் துவக்க ஜோடியை நாம் வீழ்த்த வேண்டும். ஏனெனில் தற்போது உள்ள அணிகளில் சிறப்பான துவக்க ஜோடி என்றால் அது தவான் மற்றும் ரோஹித் ஜோடியே. அவர்கள் இருவரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான துவக்கத்தை தருகின்றனர். எனவே, பின்னால் ஆடும் வீரர்கள் எளிதில் ரன் குவிக்க முடிகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தும் திட்டத்தோடு நாங்கள் களமிறங்கப்போகிறோம் என்று ராஸ் டெய்லர் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

முடிந்தால் எங்களது மண்ணில் இவரை சதமடிக்க சொல்லுங்கள் – டிம் சவுதி சவால்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்