சேவாக் போன்று அப்பர்கட் . சச்சின் போன்று கவர் டிரைவ் . இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை – டிராவிடின் வளர்ப்பு

prithvi

இந்திய அணி தற்போது முழுபலத்துடன் திகழ்கிறது. நம்முடைய அணி கலந்து கொள்ளும் சமீபத்திய தொடர்கள் அனைத்திலும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. மேலும், செல்லும் அனைத்து நாடுகளிலும் தொடர்களையும் கைப்பற்றி வருகிறது.

indian-team

வரும் மே மாதம் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று உலகின் பலநாடுகளை சேர்ந்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி சில ஆண்டுகளாக வேற லெவலில் விளையாடிவருகிறது. ஐ.சி.சி அறிவித்த அனைத்து பிரிவுகளிலும் இந்திய அணியின் வீரர்கள் விருதினை பெற்றதே இதற்கு சாட்சியாகும்.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக அணியில் திகழப்போகிறார் இந்திய அணியின் இளம் வீரரான பிரிதிவி ஷா. இவர் ராகுல் ட்ராவிடின் பயிற்சியில் வளர்ந்து 19 வயதுக்கு உட்பட்டோர் உலககோப்பையினை கேப்டனாக வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்த இவர் மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் சத்தம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

prithvi-shaw

மேலும், இவருடைய பேட்டிங் ஸ்டைல் பலரை நியாபகபடுத்துகிறது. அப்பர்கட் செய்யும்போது சேவாக் மற்றும் கவர் ட்ரைவ் செய்யும்போது சச்சின் மற்றும் டிபென்ஸ் செய்யும்போது திராவிட என அனைவரையும் இவர் நம் கண் முன்னே நிறுத்துகிறார். எனவே, இவரே இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரர் என்று பிரிதிவி ஷா பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இவரே துவக்க ஓவர்களை வீசவேண்டும் – தோனி விருப்பம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்