ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு – BCCI

koli

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-1) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து. இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் இந்த தொடர் முழுவதும் இருந்தது அனைவரையும் வியக்க வைத்தது.

kohli

பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் மற்றும் ரசிகர்களும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்க வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது இந்திய அணி. இந்நிலையில் இந்திய அணிக்கு மற்றொரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது. அதுயாதெனில், டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

பரிசுத்தொகை விவரம் : இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தொகை ஒவ்வொரு போட்டிக்கும் தலா 15 இலட்சம் அடிப்படை சம்பளம். அதுபோக,தற்போது போனசாக 4 போட்டிகளுக்கும் சேர்த்து 30 இலட்சம் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகை மொத்த ஊதியத்தில் பாதித்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

kuldeep 1

வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர் மற்றும் அணியின் உதவியாளர் குழுவிற்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா 25 இலட்சம் என்று அறிவித்துள்ளது. இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 12ஆம் தேதி துவங்க உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தோனியிடம் இருந்து போட்டியை பினிஷிங் செய்ய கற்றுக்கொள் பண்டிற்கு அறிவுரை வழங்கினார் – ரவி சாஸ்திரி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்