எதிர்பாராமல் ஏற்பட்ட தடைகளையும், சுலபமாக தகர்த்தெறியும் மந்திரம்! இன்றைய சூழ்நிலைக்கு இது அவசியம் தேவை.

mantra

இன்றைக்கு உலகம் இருக்கும் சூழ்நிலையில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சினைகளால், எதிர்பாராமல் பல இன்னல்களை நம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. அதாவது வருமானத்தில் தடை, வியாபாரத்தில் தடை, ஆரோக்கியத்தில் தடை, இப்படி கடந்த இரண்டு மாதமாக எதிர்பாராத பல தோல்விகளை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றோம். இந்த சூழ்நிலையில் ஏதாவது ஒரு வகையில் விடிவுகாலம் கிடைத்துவிடாதா என்று வீட்டிலிருந்தே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர்.

mantra sign

இறைவனை வேண்டிக்கொண்டு இன்னல்கள் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை ஒரு பக்கம் இருக்க, எதிர்பாராத தடைகளை தகர்த்தெறிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரங்களை உச்சரிப்பது இன்னும் சிறப்பானது. அப்படிப்பட்ட ஒரு மந்திரத்தை பற்றியும், அந்த மந்திரத்தை எந்த நேரத்தில் உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த மந்திரத்தை இந்தக் கடவுளை நினைத்துத் தான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இந்த நேரத்தில் தான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. முடிந்தவரை உச்சிகால பொழுதான மதியம் 12 மணி நேரத்தில் உச்சரிப்பதை மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதிகாலை மற்றும் மாலை வேளையில் உச்சரிப்பது மிகவும் நல்லது. இத்தனை முறை தான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 11 முறையிலிருந்து, 1008 முறை வரை இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

Thiyanam

நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் இந்த கணக்கு எவ்வளவு கூடிக்கொண்டே போகிறதோ, உங்களது கஷ்டங்கள் அவ்வளவு விரைவாக தீரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுத்தமாக குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ஒரே ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து, கிழக்கு பக்கம் பார்த்தவாறு, மனபலகையின் மீதோ, பாயின் மீதோ அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் அந்த மந்திரம் இதோ!

- Advertisement -

ஓம் ஹ்லீம் சர்வகார்ய
சித்திம் ஹ்லீம் ஓம் ஃபட்!

mantra-signature

முடிந்தவர்கள் வரப்போகும் பதினைந்து நாட்களும் தொடர்ந்து 1,008 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து பார்த்தால், அதிசயமான மாற்றம் உங்களுடைய வாழ்க்கையில் நிகழ்வதை கட்டாயம் உணரமுடியும். முடிங்கிபோன தொழிலாக இருந்தாலும் சரி, வராத வருமானமாக இருந்தாலும் சரி, கிடைக்கப்பெறாத நிம்மதியாக இருந்தாலும் சரி, ஆரோக்கிய குறைபாடாக இருந்தாலும் சரி, அதற்கான ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வெற்றியைத் தேடித் தரும் மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரித்து வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இன்று சித்திரை சதுர்த்தி! விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது எல்லா சங்கடங்களும் தீரும்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Prachanai theera manthiram. Manthiram in Tamil. Manthiram Tamil. Problem mantra. Palan tharum manthiram in Tamil.