பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் துளசி செடி வழிபாடு

thulasi vazhipadu
- Advertisement -

தெய்வத்தை எந்த அளவிற்கு நம்பி வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு தெய்வம்சம் பொருந்திய மரங்களும் செடிகளும் முக்கியத்துவம் வாய்ந்தாகவே திகழ்கிறது. அவற்றையும் நாம் முழுமனதோடு வழிபாடு செய்து நம்முடைய கஷ்டங்களை அதன் இடம் கூறும் பொழுது அந்த கஷ்டம் படிப்படியாக விலகுவதை நம்மால் உணர முடியும்.

இதற்கு காரணம் நாம் தெய்வம்சம் பொருந்திய செடிகளிடமும் மரங்களிடமும் நம்முடைய மனக்கவலையையும் குறையையும் கூறும்பொழுது அது நேரடியாக தெய்வத்தின் காதுகளில் சென்று விழும். அப்படிப்பட்ட தெய்வீக அம்சம் பொருந்திய செடிகளில் ஒன்றாக திகழ்வதுதான் துளசி செடி. இந்த துளசி செடியை எந்த முறையில் நாம் வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

துளசி வழிபாடு

துளசி செடி என்பது மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய செடியாக கருதப்படுகிறது. மேலும் ஒரு தோட்டத்தில் ஆயிரம் செடிகள் இருந்தாலும் துளசி செடி ஒன்று இருந்தால் தான் அதை பிருந்தாவனம் என்று கூறுவோம். மருத்துவ ரீதியாகவும் தெய்வீக அம்சம் பொருந்தியதாகவும் திகழக்கூடியது தான் இந்த துளசி செடி. கண்டிப்பான முறையில் பலரது இல்லங்களிலும் துளசி செடியை மட்டுமாவது வளர்த்து வழிபாடு செய்து வருவார்கள்.

இந்த துளசி செடி வழிபாட்டை வளர்பிறை முகூர்த்த நாளாக பார்த்து தொடங்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் வீட்டில் துளசி செடி இருக்க வேண்டும். துளசி செடி இல்லை என்றால் புதிதாக துளசி செடியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு 11 நாணயங்கள் வேண்டும். ஒரே நாணயமாக 11 நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாயாக இருந்தால் 11 ஒரு ரூபாயாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது துளசி செடிக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து நெய்வேத்தியமாக டைமண்ட் கற்கண்டை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் நாணயத்தில் ஒரு நாணயத்தை எடுத்து அந்த துளசி செடி இருக்கும் மண்ணில் புதைத்து விட்டு ஊதுபத்தி காட்டி அங்கு வைத்து விட வேண்டும். இதே போல் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாணயமாக 5 நாணயங்களை செடியில் புகைக்க வேண்டும்.

ஆறாவது நாளும் இதே போல் தீபமே ஏற்றுக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக கற்கண்டே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாணயத்தை எடுத்து துளசி செடி இருக்கும் மண்ணில் புதைத்து விட்டு, புதைத்த இடத்தில் இரண்டு சொட்டு காய்ச்சாத பாலை விட வேண்டும். பிறகு ஊதுபத்தி காட்டி வேண்டும். இப்படி மீதம் இருக்கும் நாணயங்களையும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். 11 நாணயங்களும் முடிவடைந்த பிறகு 34 நாட்கள் தீபம், நெய்வேத்தியம், ஊதுபத்தி இவற்றை மட்டும் தினமும் ஏற்றி வைத்து துளசி செடியை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

முதல் நாளில் இருந்து நாம் ஊதுபத்தி ஏற்றி வைக்கும் பொழுது அதிலிருந்து சாம்பல் விழும் அல்லவா அந்த சாம்பலை எடுத்து நெற்றியில் தினமும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 45 நாட்கள் இந்த வழிபாட்டை செய்து முடிக்க வேண்டும். 46 வது நாள் புதைத்து வைத்திருந்த 11 நாணயங்களையும் எடுத்து அதை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். பிறகு ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் அந்த 11 நாணயங்களையும் வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து கொட்டை பாக்கு, மூன்று கோமதி சக்கரம், மூன்று விரலி மஞ்சள் இவற்றை வைத்து மூட்டையாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கஷ்டங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி பணம் சேருவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: நல்லது நடக்க மந்திரம்

துளசி செடியை வழிபடுவதால் பல நன்மைகள் ஏற்படும். நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்குரிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையாக இந்த வழிபாட்டு முறை திகழ்கிறது. விருப்பம் இருப்பவர்கள் இந்த வழிப்பாட்டு முறையை பின்பற்றி தங்கள் கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -