அன்றாட வாழ்வில் முறையான உணவு பழக்கத்தை நாம் எப்படி பின்பற்றுவது

arisi-vadagam

நாம் உயிர் வாழ நீர், காற்று எவ்வளவு முக்கியமோ அதேபோல் , உணவும் முக்கியமானதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவுமுறைகளை சரியான வகையில் நாம் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் உடல் ஆரோக்கியம் பாழாகின்றது. நம் அன்றாட வாழ்வில் முறையான உணவை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதை இப்பதிவில் காணலாம்.

உணவை உட்கொள்ளும்பொழுது தரையில் அமர்ந்து கொண்டுதான் சாப்பிடவேண்டும். எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ நாம் சாப்பிடக்கூடாது. குடுத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு வேளையாவது சாப்பிடவேண்டும். இதனால் உறவுகள் இன்னும் வலுவாகும். சாப்பிடும் பொழுது மற்ற பிரச்சனைகளை பற்றி பேசாமல் மகிழ்சியாக, எதைப்பற்றியும் யோசிக்காமல் உணவை உட்கொள்ளவேண்டும். நல்ல ஆரோகியமான உணவுகளை நாம் ரசித்து சாப்பிட்டால் உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது.

 

பசித்தால் மட்டுமே உணவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசிக்காமல் சாப்பிடக்கூடாது. உணவை எப்பொழுதும் அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. மெதுவாகவும், நிறுத்தி நிதானமாக சாப்பிடவேண்டும். உணவை நன்றாக நொங்கும்படி சாப்பிடவேண்டும். உணவை முழுங்கக்கூடாது. சாப்பிடும்பொழுது ஜீரணம் ஆகும் உணவுகளை நாம் உட்கொள்வது நல்லது. உணவை அவமதிக்கக்கூடாது.மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். சாப்பிடும் முன்பு முதலில் உணவை தந்த விவசாயிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு பின்னரே சாப்பிட வேண்டும். முக்கியமாக எக்காரணத்தை கொண்டும் உணவை வீணாக்கக்கூடாது. உணவை தயாரிக்க எத்தனை பேருடைய உழைப்பு இருக்கும். ஆகையால் உணவை வீணாக்குவது அவர்களை அவமதிப்பதற்கு சமமாகும். இதை விட பெரிய பாவம் வேறொன்றும் இல்லை. நாம் வீணாக்கும் ஒவ்வொரு அரிசியும் மற்றவர்களுக்கு சொந்தமானவை.

arisi

அளவுக்கு மீறி உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவுக்கு மீறி எடுத்து கொண்டால் உடல் பருமனாகிவிடும். இதனால் ஆரோகித்திற்கு பாதிப்பு உண்டாகிறது. உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பது நல்ல பழக்கம் ஆகும். காலையில் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. முன்று வேளையும் உணவு உட்கொள்ளவேண்டும். இன்றைய காலகட்டத்தில் அனைத்து உணவுகளிலும் விஷமாக மாறிவிட்டது. எனவே, முடிந்தவரை ஆரோக்கியமான, இயற்கையான உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். இதனால் உடல் ஆரோகியத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே:
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த இறைவனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

English Overview:
Here we have proper food habits explained in tamil. We have details of proper food too.