புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த இறைவனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

perumal-3

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அதில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது குழந்தை பாக்கியம் இல்லை என்பதுதான். இவ்வகை பிரச்னைகளை தீர்க்க பரிகாரங்கள் என்னவென்று இப்பதிவில் காண்போம்.

baby

குடும்பத்தில் வரதட்சனை கொடுமை, மாமியார் கொடுமை என பல பிரச்சனைகள் இருந்தாலும், மனைவிமார்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலை எப்போதும் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் தெருவுக்கு தெரு குழந்தையின்மை மருத்துவமைகளும், பல்வேறு வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், விஞ்ஞான ரீதியாக பல தடைகளை தாண்டி சிலருக்கே குழந்தை பிறக்கின்றன. இந்த குழந்தையின்மை பிரச்சனையால் குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகி விவகாரத்தில் போய் முடிகின்றன.

இதற்கான பரிகாரம் செய்யும் இடமாக காஞ்சிபுரத்தில் திருப்புட்குழி என்ற கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் ஒரு பழைமையான திவ்யதர்ஷ பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும், கணவன் மனைவி இருவரும் சென்று, அங்கு உள்ள கருவறையில் இருக்கும் குளத்தில் இருவரும் மூழ்கி எழுந்து, பின்னர் மனைவின் முந்தானையில் பயிரை கட்டிவிடவேண்டும். கட்டிவிட்ட நேரம் தொடங்கி அன்று, இரவு முழுவதும் அங்கேயே தங்கி விடவேண்ண்டும். மறுநாள் காலையில் மனைவியின் முந்தானையில் முடிச்சை அவிழ்த்து பார்க்க வேண்டும். பயிர் முளைகட்டி இருந்தால் பரிகாரம் முடிவடைந்ததாக ஐதீகம்.

baby 

இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும். இதனால், வீட்டில் உள்ள அணைத்து குழப்பங்களும் நீங்கி கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பெருகும்.

இதையும் படிக்கலாமே
தினமும் நீரை பூஜை அறையில் வையுங்கள்! நிகழும் அதிசயத்தை பாருங்கள்!

English Overview:
Here we have kulanthai pakkiyam pera tips in tamil. We have details of kulanthai pakkiyam tips too.