புதன் பெயர்ச்சி பலன்கள் 2018

Budhan Peyarchi

சிறந்த அறிவாற்றலுக்கும், ஞானத்திற்கும் அதிபதியாகிய புதன் இப்போது மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு மே 27 அன்று பெயர்ச்சி அடைந்தார். மற்ற கிரகங்களின் பெயர்ச்சி போல், புதன் கிரகப் பெயர்ச்சியை பெருபாலானோர் முக்கியமானதாக கருதுவதில்லை. ஆனால் ஒரு மனிதனின் சிந்தனை ஆற்றல், கற்கும் ஆர்வம், கணிதத்திறன் மற்றும் அவனின் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு காரகன் புதன் பகவான் ஆவார். அப்படிப்பட்ட புதன் கிரகப் பெயர்ச்சியினால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசிக்கு 2 ஆம் வீடுடான ரிஷப ராசிக்கு புதன் பெயர்ச்சியடைவதால், இந்த ராசிக்காரர்களின் சிந்தனை மற்றும் செயல்களில் புதிய உற்சாகம் பிறகும் . தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். விரும்பிய இடங்களில் பணிமாற்றம், ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் ஏற்படும் பெண்களுக்கு சிறிது உடல்நலக் குறைகள் ஏற்பட்டு நீங்கும். அரசியலில் உள்ளோருக்கு மக்கள் செல்வாக்கு மிகுதியாகும்.

ரிஷபம்:
Rishabam Rasiரிஷப ராசிக்கு அந்த ராசியிலேயே புதன் அமர்வதால், நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சிறிது உடல் நலம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் திறமையின் காரணமாக உங்கள் வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும். கலைத் தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார நிலை உயரும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும்.

மிதுனம்:
midhunamமிதுன ராசிக்கு 12 ஆம் வீடு ராசியான ரிஷபத்தில் புதன் நகர்வதால், இந்த ராசியினர் சுமாரான பலன்களை அடைவார்கள். வீட்டில் பிரச்சனைகள் உண்டாகும். அதிக அலைச்சலால் உடல் சிறிது பதிப்புகளை சந்திக்கும். மாணவர்கள் கடின முயற்சிகள் செய்வதன் மூலமே கல்வியில் வெற்றி நிலை பெற இயலும். தொலை தூர நாடுகளுக்கு செல்லும் யோகமும் சிலருக்கு ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasiகடக ராசிக்கு புதன் 11 ஆம் இடமான ரிஷப ராசியிலிருப்பதால் சிலருக்கு எதிர்பாராத விதமான வகைகளில் தன லாபம் ஏற்படும். பொதுவாழ்வில் உள்ளோர்கள் தங்களின் சேவைகளுக்காக மக்களால் கவுரவிக்கப்படுவார்கள். நீண்ட நாள் திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு திருமணம் நடக்கும். வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கும் அமைப்பு உருவாகும்.

திருமண பொருத்தம், நட்சத்திர பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்கு புதன் 10ஆம் இடத்திலிருப்பதால் நெருங்கிய உறவுகள் சிலரால் தன வருவாய் ஏற்படும். வேலையில் இருப்போர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமுண்டாகும். .பெண்களுக்கு ஆக வேண்டிய சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும்.

கன்னி:
Kanni Rasiகன்னி ராசியின் அதிபதியாகிய புதன் இந்த ராசிக்கு 9 ஆம் இடத்தில் அமர்வதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. உடலில் புதியதொரு உற்சாகம் ஏற்படும். தொடங்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளோர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவால் மருத்துவ செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் படித்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

துலாம்:
Thulam Rasiதுலாம் ராசிக்கு 8 ஆம் இடத்திற்கு புதன் பெயர்வதால் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. சிலர் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டுப்பயணங்களால் லாபமேற்படும். அதிக உடல் உழைப்பு காரணமாக ஒரு சிலருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகலாம். பெண்கள் வழியில் தன லாபம் ஏற்படும். குழந்தைகள் இல்லாமல் ஏங்கியோர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

விருச்சகம்:
virichigamவிருச்சிக ராசிக்கு 7 ஆம் இடத்தில் புதன் அமர்வதால் சிறு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். . பேசும் வார்த்தைகளில் கவனம் கொண்டால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். ஒரு சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்கள், வீடு , நிலம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். திருமண வயதுடைய பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

தனுசு:
Dhanusu Rasiதனுசு ராசிக்கு 6 ஆம் இடத்தில் புதன் அமர்வதால் சிறு உடல் நல பாதிப்புகள் அவ்வப்போது வந்து நீங்கும். செய்யும் தொழிலிலோ, வியாபாரத்திலோ லாபத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. கலைத்துறையில் உள்ளவர்கள் பணம், புகழ், விருதுகள் கிடைக்கப்பெறுவார்கள். முன்கோப எண்ணங்களை கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasiமகர ராசிக்கு 5 ஆம் வீட்டில் புதன் இருப்பதால் அதிக பண வருவாய் கிடைக்கும். மனஸ்தாபங்களால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடன்கள் அனைத்தும் அடைத்து மனநிம்மதி அடைவீர்கள். அரசியலில் இருப்போர்கள் சற்று எச்சரிக்கையாக இல்லாவிடின் அவப்பெயரை சம்பாதிக்கும் சூழ்நிலை உண்டாகும்.சிலருக்கு சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும்.

கும்பம்:
Kumbam Rasiகும்ப ராசிக்கு புதன் 4 ஆம் இடத்திற்கு நகர்வதால் உங்களால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் வெளிநாடுகள் சென்று வரக்கூடிய அமைப்பு ஏற்படும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கும், உங்கள் பேச்சுக்கும் மதிப்பு ஏற்படும். உங்கள் தொழில்கள் மற்றும் வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே உடலில் இருந்த பாதிப்புகள் நீங்கி உடலும் மனமும் உற்சாகம் பெறும்.

தினசரி தமிழ் காலண்டர் குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்

மீனம்:
meenamமீன ராசிக்கு 3 ஆம் இடத்திற்கு புதன் செல்வதால் உங்கள் உறவினர்களோடு இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒன்று சேர்வீர்கள். பணியிடத்தில் சிலரின் சூழ்ச்சிகளால் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படும் நிலையுள்ளதால் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமமானதாகவே இருக்கும். பெண்களின் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்.