எல்லையே இல்லாமல் தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை ஒரே நாளில் தீரும். மகாலட்சுமிக்கு இந்த சாதத்தை நைவேத்யமாக வைத்தால்!

mahalashmi

எல்லையில்லாத தொல்லையை கொடுப்பதுதான் இந்த வாழ்க்கை. அந்த தொல்லைகளை எல்லாம் கடந்து வெற்றி பெறுவதில் தான் சுவாரசியமே அடங்கியுள்ளது. இந்த  வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகளை கண்டு நாம் பயப்படக்கூடாது. பிரச்சினைகளே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. ஆக பண பிரச்சினையாக இருந்தாலும் கடன் பிரச்சினையாக இருந்தாலும் அல்லது மற்ற எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் அது சரியாகும் என்ற நம்பிக்கை மனிதனுடைய மனதில் முதலில் எழ வேண்டும். ‘இன்று மேலே இருப்பவர்கள் நாளை கீழே போவதும், நாளை கீழே இருப்பவர்கள், என்றாவது ஒருநாள் மேலே போகப் போவதும்’ வாழ்க்கை சுழற்சியில், இயற்கையான ஒரு விஷயம்தான்.

perumal-1

சரி, வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எத்தனையோ வகையான பரிகாரங்கள், எத்தனையோ விதமான சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மிகவும் சுலபமாக இருக்கக் கூடிய ஒரு பரிகார, வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பரிகாரங்களை வழிபாட்டு முறையோடு சேர்த்து செய்யும் போது அதற்கு இரட்டிப்பு பலன் உண்டு.

பெருமாளின் மனதில் குடி கொண்டு கொண்டிருப்பவர் மகாலட்சுமி. மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் உரியது துளசி இலை. இந்த துளசி இலையை வைத்துதான் இந்த பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. வாரம்தோறும் வரக்கூடிய சனிக்கிழமையில், இந்த பரிகாரத்தை செய்யலாம். முடிந்தவர்கள் தொடர்ந்து தினந்தோறும் இந்த பரிகாரத்தை செய்தாலும் நல்ல பலன் உண்டு.

rice

காலை வேளையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, நீங்கள் சமைக்கின்ற சாதத்தில் ஒரு கைப்பிடி அளவு சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சொட்டு நெய் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு 4 துளசி இலைகளை அந்த சாதத்தோடு பிசைந்து, இதை பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் நிவேதனமாக வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பிரசாதத்தை பெருமாள் முன்பு வைத்துவிட்டு மனமுருகி உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பாக தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல வழி பிறக்கும். சரி இந்த பிரசாதத்தை இறைவனுக்கு நிவேதனமாக வைத்து விட்டு என்ன செய்வது. உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் கொஞ்சமாக இந்த பிரசாதத்தை சாப்பிடலாம். மீதமிருக்கும் பிரசாதத்தை காக்கை குருவிகளுக்கு அல்லது பசு மாட்டிற்கு கொடுத்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

mint

வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீராத துன்பங்கள் கவலைகள் எல்லாவற்றிற்கும் நிச்சயம் என்றாவது ஒரு நாள் நமக்கு விடிவுகாலம் பிறக்கும். அந்த விடிவு காலத்தை இறைவன் நமக்கு எதன் மூலம் காட்டுவார் என்பது தெரியாது. நமக்கே அறியாமல் ஏதோ ஒரு பரிகாரத்தை செய்து, ஏதோ ஒரு புண்ணியத்தை தேடி இருப்போம். அந்த புண்ணியம் நமக்கு வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இவர்களுடைய கையால் தங்க நகைகளை அடமானத்தில் வைத்தால், அந்த நகையை ஆயுசுக்கும் மீட்க முடியாது. மிஸ் பண்ணாம அது எந்த கை என்று நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.