உங்களுடைய வீட்டில் நல்லது மட்டுமே நடப்பதற்கு இந்த ஒரு தண்டு வீட்டில் வைத்தால் போதும். கெடுதல் உங்க கிட்ட கூட வராது.

gopuram-prayingman

தினம்தோறும் உங்களுடைய இறைவழிபாட்டில் நீங்கள் என்ன வேண்டிக் கொள்வீர்கள்? இறைவனிடம் ‘எனக்கு இந்த வரம் வேண்டும், அந்த வரம் வேண்டும்! என்று வரத்தினை கேட்டுத்தானே பெறுவீர்கள்’. இப்படியாக இறைவனிடம் வரங்களை கேட்டு கேட்டு பெறுவது சரியா? என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். இறைவனுக்கு தெரியாதா? நமக்கு எதைக் கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்க கூடாது என்று! நீங்கள் ‘உங்களுக்கு நல்லது என்று நினைத்து கேட்கக்கூடிய வரத்தின் மூலம் எதிர்காலத்தில் கெடுதல் நடப்பதற்கு வாய்ப்பு இருந்தால், அந்த இறைவன் உங்களுக்கு நிச்சயம் அளிக்கவே மாட்டார்’.

praying-god

‘இன்று உங்களுக்கு கெடுதல் ஏற்பட்டாலும், பிற்காலத்தில் அதன் மூலம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்’, உங்களுடைய எதிர்கால நன்மைக்காக எதைக் கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்கக் கூடாது என்று கடவுளுக்கு நன்றாகவே தெரியும். குழப்பம் வேண்டாம். இறைவனிடம் வேண்டுதல் வைக்கும் போது ‘நான் தவறான பாதைக்கு சென்றால், என்னை கடவுளான நீ, தடுத்து நிறுத்த வேண்டும். எனக்கு எது நல்லதோ அதை நீயே செய்ய வேண்டும்’. என்ற வரத்தை மட்டும் வைத்து வேண்டி பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.

சரி, ஒருவருக்கு வீட்டில் சுப காரிய தடைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே வருக்கிறது. வீட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முடியவில்லை. எதை தொட்டாலும் தடங்கல் வந்து கொண்டே இருக்கிறது எனும் பட்சத்தில், இந்த தடங்கல்களை தகர்த்தெறிந்து வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க தாந்திரீக ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

praying-gopuram

இறை வழிபாட்டோடு சேர்ந்த, நல்ல வழியில் செய்யக்கூடிய, தாந்திரீக வழிபாட்டின் மூலம் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூர வேண்டியது அவசியமாயிற்று. இந்த தாந்திரீக வழிபாட்டிற்காக பயன்படுத்தப் போகும் பொருள் புதினா தழைகள். இந்த புதினாவிற்கு நேர்மறை ஆற்றலை தன்வசப்படுத்த கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. நல்ல நறுமணம் வீசும் பொருள் அல்லவா இது.

- Advertisement -

பரிகாரம் செய்வதற்கு முந்தைய நாளில் புதினாவை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டாலும் சரி, அதிகாலை வேலையில் இந்த காரியத்தை செய்வது கைமேல் பலனை கொடுக்கும். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புதினா கட்டில் இருந்து 5 புதினா இனுக்குகளை எடுத்து முதலில் உங்களது உள்ளங்கைகளில் வைத்து, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, அதன் பின்பு அந்த இலைகளை, தாம்புல தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

pudina

தண்டில் இருக்கும் இலைகளை முதலில் தனியாக கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த தண்டை, சிறிய சிறிய துண்டுகளாக உங்கள் கைகளாலேயே கிளியோ, அல்லது கத்தரிக்கோலால் வெட்டியோ ஒரு மஞ்சள் துணியில் வைத்து, முடிச்சு போட்டு கட்டி உங்களுடைய வீட்டு பூஜை அறையிலியே வைத்து, தொடர்ந்து 48 நாட்கள், தினமும் தீபம் ஏற்றி வைக்கும் போது அந்த முடிச்சுக்கு தூபம் காட்டி வர வேண்டும்.

pudina

அடுத்தபடியாக நீங்கள் அந்த தண்டிலிருந்து பறித்த இலைகள் இருக்கும். அதை ஒரு தட்டில் போட்டு நிழலிலேயே நன்றாக உலர வைத்த பின்பு, அதை உங்கள் கைகளாலேயே பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை உங்களுடைய வீட்டு விபூதியில் கலந்து விட்டு, தினம்தோறும் வெளியில் செல்லும்போது அந்த விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டு போனால் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும்.

poojai arai

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் புதினா தண்டு, வீட்டில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தாலும் சரி செய்யும். தோஷங்களினால் சுபகாரியத் தடைகள் இருந்தாலும் அதை சரிசெய்யும். உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை, தீராத நோய் தீர, இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை சரி செய்யும் சக்தி அந்த புதினா தண்டிற்கு உண்டு என்பது மட்டும் உறுதி. 48 நாட்கள் கழித்து அந்த புதினா தண்டுகளை, ஓடும் தண்ணீரிலோ அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயம் பலனை பெற முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இவர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் இந்த 1 பொருள் உங்களை கோடீஸ்வரராக கூட மாற்றிவிடும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.