இவர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் இந்த 1 பொருள் உங்களை கோடீஸ்வரராக கூட மாற்றிவிடும் தெரியுமா?

cash-thirunangai

கடவுளே அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சிவபெருமானும், பார்வதியும் இணைந்த ஒரு உருவம் தான் அர்தநாரீஸ்வரர். இன்று திருநங்கைகள் ஆக இருக்கும் இவர்கள், அர்த்தநாரீஸ்வரரின் மறு உருவமே என்று நம்பப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து நாம் வாங்கும் ஆசீர்வாதம், நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. திருநங்கைகள் ஆசீர்வாதம் கொடுப்பது போல், எளிதாக சாபமும் கொடுத்து விடுவார்கள். இவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதம் எப்படி உண்மையில் பலிக்குமோ? அதே போல சாபமும் பலித்துவிடும். அதனால் தான் இவர்கள் கேட்ட உடனேயே நாம் காசும் யோசிக்காமல் கொடுத்து விடுகிறோம்.

Arthanareswarar

திருநங்கைகள் எவ்வளவோ பேர் நல்ல நிலைமைக்கு முன்னேறியதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அவர்களுக்குள் இருக்கும் திறமையும் நம்மை விட கூடுதலாகவே இருக்குமாம். ஆனால் அவர்களை உலகம் அங்கீகரிக்காத காரணத்தினால் திறமைகள் பலவும் முடுக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து நாம் வாங்கும் இந்த ஒரு பொருளுக்கு நம்மை கோடீஸ்வரனாக கூட மாற்றி விடுமாம். ஆனால் அதை அவர்களிடம் இருந்து பெறுவது என்பது மிகவும் கடினமான காரியம். அப்படி அவர்களிடம் என்ன இருக்கிறது? நாம் எதைப் பெற வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பொதுவாக திருநங்கைகள் நம்மிடம் பணம் கேட்பது இயல்பாக நடந்து வரும் ஒரு விஷயமாகும். கோவில்களிலும், போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் இவர்களிடம் நாம் பார்த்ததும் பணத்தை கொடுத்து விட்டால் நமக்கு அவர்கள் ஆசீர்வாதத்தை பரிசாக கொடுப்பார்கள். இவர்களிடம் வாங்கும் ஆசீர்வாதம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பார்கள். இதனால் போகிற காரியம் ஜெயமாக கூடிய வாய்ப்புகளும் உண்டு. அத்தகைய சிறப்புகள் வாய்ந்த இவர்களிடமிருந்து ‘ஒரு ரூபாய் நாணயத்தை’ நாம் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டால் போதும், கோடீஸ்வரனாக கூட மாறி விடலாம். அந்த அளவிற்கு நமக்கு பெரும் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

one rupee

ஆனால் அவை எளிதாக நடந்து விடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். நம்மிடமிருந்து வேண்டுமானால் அவர்கள் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். அவர்களிடம் பணத்தை எப்படி பெறுவது? நீங்கள் கேட்டாலும் அவர்களுக்கு எதற்காக கேட்கிறீர்கள்? என்பதும் புரிந்து விடும். நீங்கள் கேட்கும் நாணயம் எந்த அளவிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். எப்படியாவது அவர்களிடமிருந்து நீங்கள் வாங்கி விட்டால், அல்லது அவர்களாகவே கொடுத்து விட்டால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான்.

- Advertisement -

அது போல் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற குழந்தை பொம்மை ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். திருநங்கைகளிடம் பொம்மையை கொடுத்தால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருநங்கைகள் பணத்தை தவிர நம்மிடமிருந்து எதையுமே வாங்க மாட்டார்கள். ஆனால் பொம்மையுடன் சேர்த்து பணத்தையும் கொடுத்து விடுங்கள். அப்படி அவர்கள் பொம்மையை வாங்கி விட்டால் விரைவாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

baby-cry

அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் புத பகவான் திருநங்கைகளுக்கு அருள் புரிவதாக ஜோதிட புராணங்கள் எடுத்துரைக்கிறது. புத பகவானின் அருள் பெறவே திருநங்கைகளுக்கு இவ்வாறு கொடுப்பது பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல் மேலும் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் எதிரிகளை நண்பர்களாக கூட மாற்றிக் கொள்ளலாம். அதற்கும் இவர்களிடம் வழி இருக்கிறது. தீராத எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்களும், எதிரிகளாக இருந்தாலும் அவர்களை நண்பர்களாக மாற்றி விட வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்களும் இது போல் செய்யுங்கள்.

puthan

ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய எதிரியின் முழு பெயரை எழுதிக் கொள்ளுங்கள். அதை மடித்து சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கருப்பு அரைஞான் கயிறு எடுத்து இரண்டாக சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். அந்த சிறு கயிறை வைத்து அந்த பேப்பரை கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்க விரும்பும் பணத்தையும் சேர்த்து திருநங்கைகளுக்கு கொடுத்தால் போதும். அதனை அவர்கள் வாங்கி விட்டால் சிறிது காலத்திலேயே எப்பேர்பட்ட எதிரியாக இருந்தாலும் உங்களுக்கு நண்பர்களாக மாறி விடுவார்கள். இதன் மூலம் பகை நீங்கி நிம்மதி உண்டாகும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டில் தையல் மெஷின் இருக்கா? உங்களுக்கு வரப்போகும் கஷ்டங்களை தடுக்க, இதை நீங்கள் தெரிஞ்சுக்கிட்டேதா ஆகணும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.