புது வீடு குடி போகும் பொழுது இந்த ஒரு பொருளை மட்டும் நிச்சயம் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் தீராத துன்பத்திற்கு ஆளாகிவிடுவோம்

home-hall-astro
- Advertisement -

புதிதாக வீடு கட்டி குடியேறுவதாக இருந்தால் அந்த வீட்டிற்கு முதலில் எந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அவ்வாறு மஞ்சள், குங்குமம், அரிசி, பருப்பு போன்ற மங்கலப் பொருட்கள் மற்றும் தானிய பொருட்களை தான் முதலில் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். அதுபோல பழைய வீட்டில் இருந்து வேறு புதிய வாடகை வீட்டிற்கு மாறி செல்வதாக இருந்தாலும் இவ்வாறு மங்களகரமான பொருட்களை தான் கொண்டு செல்ல வேண்டும். அப்படி சில பொருட்கள் வீட்டிற்கு நேர் மறை சக்திகளை கொடுக்கின்றன. சில வீட்டிற்கு எதிர் மறை சக்திகளை கொடுக்கின்றன. அவ்வாறு எதிர்மறை சக்திகளை கொடுக்கக் கூடிய பொருட்களை வீடு குடி போகும் போது எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அவை என்ன என்பதையும், புது வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

built-home1

ஒரு வீடு புதியதாக கட்டுவதாக இருந்தால் அந்த வீட்டினை வாஸ்து பார்த்து வாசல் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும், சமையல் அறை எங்கு வைக்க வேண்டும், பூஜை அறை எங்கு வைக்க வேண்டும் என்றெல்லாம் அந்த வீட்டின் அமைப்பை பார்த்து பார்த்து கட்ட சொல்கின்றோம். அவ்வாறு வாடகை வீட்டிற்கு குடி போவதாக இருந்தாலும் அந்த வீட்டின் அமைப்பு மனதிற்கு திருப்தியாக உள்ளதா? அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் நல்லவிதமாக வாழ்ந்திருந்தார்களா? என்றெல்லாம் விசாரிப்பது என்பதும் வழக்கம் தான்.

- Advertisement -

இவ்வாறெல்லாம் நிறைய விஷயங்களை மிகவும் யோசித்து அக்கறையுடன் செய்வது அந்த வீட்டில் வாழப்போகும் குடும்பம் நிம்மதியாக இருப்பதற்கும், அந்த குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவி கொண்டிருப்பதற்காகவும் தான். அவ்வாறு புதியதாக வீட்டிற்கு செல்லும் குடும்ப உறுப்பினர்கள் பழைய வீட்டில் இருந்து தங்களது பொருள்களை எல்லாம் புதிய வீட்டிற்கு கொண்டு செல்வார்கள்.

family

இவ்வாறு செய்வதற்கு முன்னர் அந்த வீட்டை சுத்தம் செய்து, பால் காய்ச்சி ஹோமம் செய்த பின்னர்தான் மற்ற பொருட்களை வீட்டிற்குள் கொண்டு செல்ல வேண்டும். நாம் முதன்முதலில் வீட்டிற்குள் கொண்டு செல்ல வேண்டிய மங்களகரமான பொருட்களை வைத்து பூஜை செய்து விட்டு அதன் பின் மற்ற பொருள்களை கொண்டு செல்வோம்.

- Advertisement -

ஆனால் பழைய வீட்டில் நாம் உபயோகித்த துடைப்பத்தை மட்டும் புதிய வீட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. அந்த துடைப்பம் புதியதாக வாங்கி வைக்கப்பட்டதாக இருந்தாலும் இந்த வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்த்து விட வேண்டும்.

broom-thudaippam

புதிய வீட்டிற்கு குடி போக இருப்பவர்கள் புதியதாக ஒரு துடைப்த்தை வாங்கி, புதிய வீட்டை சுத்தம் செய்து, பால் காய்ச்சி பூஜை செய்த பின்னர்தான் மற்ற பொருட்களையெல்லாம் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி தேவி தானாக நமது வீட்டிற்குள் வந்து விடுவார் என்பது நமது முன்னோர்களின் கூற்றாகும்.

- Advertisement -