அட இந்த சாதத்தை, பிரியாணி பக்கத்துல வெச்சா, டேஸ்ட்ல பிரியாணியே தோத்தது போயிடுங்க! சூப்பர் ‘வெரைட்டி ரைஸ் ரெசிபி’ உங்களுக்காக!

pudina-rice
- Advertisement -

எப்ப பாத்தாலும் உங்க வீட்டில ஏதாச்சும் வித்தியாசமா ஸ்பெஷலா, செய்யணும்னா, அது வெறும் பிரியாணி மட்டும் தானா?  கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணி பாக்கலாமா. நம்ம வீட்ல இருக்குற சில பொருட்களை வைத்து, கொஞ்சம் வித்தியாசமான முறையில் வித்தியாசமான வெரைட்டி ரைஸ் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை லஞ்ச் பாக்ஸ்கும் பேக் பண்ணி கொடுக்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் சத்து உள்ள ஒரு பொருளை இதில் சேர்க்கப் போகிறோம். கமகமன்னு வாசத்தோட சீக்கிரமா ஒரு டிஷ். வாங்க ரெசிபியை பாத்துக்கலாம்.

mint

இந்த புதினா வெரைட்டி ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், பட்டை – 1, லவங்கம் – 1, அன்னாசிப்பூ  – 1, மிளகு – 1 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 6 இலிருந்து 7 இரண்டாக வெட்டியது, தக்காளி சின்ன சைஸ் – 1 பொடியாக நறுக்கியது. பூண்டு – 20 பல் தோல் உரித்தது, இஞ்சி – 10 கிராம் தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டியது. தேங்காய் துருவல் – 1/2 கப், ஒரு கைப்பிடி அளவு புதினா, கொஞ்சம் போல கொத்தமல்லித்தழை. (புதினா உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது.)

- Advertisement -

Step 1:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, முதலில் பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ, மிளகு, இந்த மசாலா பொருட்களை சேர்த்து 30 வினாடிகள் வதக்கி, அதன் பின்பு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு இஞ்சி, இவைகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.

pudina-rice1

அதன் பின்பாக தேங்காய் துருவலையும், புதினா கொத்தமல்லி தழையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி விட்டு, இந்த கலவையை தனியாக தட்டில் மாற்றி, ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு கொஞ்சம் போல தண்ணீர் விட்டு 1/4 ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் சோம்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 நீள்வாக்கில் வெட்டியது, பிரியாணி இலை – 1, இவைகளை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வதக்குங்கள்.

rice

Step 3:
2 கப் அளவு அரிசிக்கு, மேலே சொல்லப்பட்டுள்ள அளவுகள் சரியாக இருக்கும். அதாவது 2 ஆழாக்கு. உங்களுக்கு பாசுமதி அரிசி தேவை என்றால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், சீரகச்சம்பா கிச்சடி அரிசி வேண்டும் என்றாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். (சாப்பாட்டு புழுங்கல் அரிசியில் செய்தால் சுவை கொஞ்சம் குறைவாக இருக்கும் அவ்வளவுதான்.)

2 கப் அளவு பாசுமதி அரிசியை கழுவி, 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊறிக் கழுவி தயாராக இருக்கும் அந்த அரிசியை குக்கரில் இருக்கும் விழுதோடு சேர்த்து 2 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, இறுதியாக அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஊற்றி, பிரியாணியை நன்றாக கலந்து விட்டு, மிதமான தீயில் ஒரு விசில் வைத்தால் மட்டும் போதும்.

pudina-rice2

கமகம வாசத்தோடு ஒரு புதினா பிரியாணி வெரைட்டி ரைஸ் தயார் ஆகி இருக்கும். இதற்கு கூட வெங்காய பச்சடி இருந்தாலோ அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்துக்கொண்டு சூப்பராக சுவையாக சாப்பிட்டு விடலாம். எப்படி இருக்கு? சொல்லும்போதே சாப்பிடணும் போல இருக்குதா? இன்னிக்கி ராத்ரி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -