சமையலுக்கு புளியை பயன்படுத்திவிட்டு இனி சக்கையை தூக்கி போடாதீர்கள்! இப்படி செஞ்சு வெச்சா உங்க வேலை மிச்சம் ஆயிடும்.

samayal-puli
- Advertisement -

சமையலுக்கு எப்படியும் அடிக்கடி புளியை பயன்படுத்துவது வழக்கம். சமையல் செய்யும் இந்த புளியில் இருக்கும் வீரியம் இந்த பொருட்களை ரொம்பவே கஷ்டப்படாமல் சுலபமாக சுத்தம் செய்து தரக்கூடிய சக்தி கொண்டுள்ளது. இது மட்டும் தெரிஞ்சா இனி சமையல் செய்யும் பொழுது சக்கையை கண்டிப்பாக குப்பையில் தூக்கி எறிய மாட்டீர்கள். புளிச் சக்கையை வைத்து உபயோகமாக என்ன செய்ய முடியும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

புளியில் இருந்து கிடைக்கக் கூடிய இந்த புளி சக்கை கொஞ்சம் மீதி இருந்தால் கூட அதை தூக்கி எறிய வேண்டாம். சிலர் அதிகமான புளியை எடுத்து கரைத்து மீதமிருக்கும் புளி சக்கையை பிரிட்ஜில் எடுத்து வைத்து விடுவார்கள். புளி ஒரு கெட்டுப் போகாத ஒரு பொருள் என்பதால் இவ்வாறு செய்வதில் எந்தத் தவறும் இல்லை, அதை மீண்டும் எடுத்து தேவையான பொழுது தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சந்தேகம் நிச்சயம் பலருக்கும் இருந்திருக்கும். சக்கையை ஒரு ஏர் டைட் கண்டைனைர் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு மேல் அதையும் நாம் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

புளி சக்கையை கொண்டு பொதுவாக பூஜை பொருட்களை சுத்தம் செய்வது வழக்கம். பித்தளை பாத்திரங்களை பளிச்சிடக் கூடிய இந்த புளி சக்கை பித்தளை பொருட்களை எப்படி கை வைக்காமல் சுத்தம் செய்கிறது? புளி சக்கையில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் பித்தளைப் பாத்திரங்கள், பித்தளை பூஜை பொருட்கள் அல்லது கேஸ் ஸ்டவ்வில் இருக்கும் பர்னர் போன்றவற்றை முழுமையாக மூழ்கும்படி அழுத்தி வையுங்கள்.

24 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள், 8 மணி நேரம் கழித்து பார்த்தாலே அது முழுமையாக கருமை நீங்கி பித்தளை பாத்திரம் பளபளக்கும். ஆனால் அதை விட இருபத்தி நான்கு மணிநேரம் நன்கு ஊற விட்டு விட்டால் நீங்கள் கையை கூட வைத்து தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை, அவ்வளவு புதியது போல பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் மின்னும்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை இது போல் செய்யாவிட்டாலும் கேஸ் பர்னர் சுத்தம் செய்வதற்கு இதுவே ரொம்ப உபயோகமான ஒரு குறிப்பாக இருக்கும். பர்னரை சுத்தம் செய்வதில் இருக்கும் சிரமத்தை இந்த புளி சக்கை இவ்வளவு சுலபமாக நீக்க செய்யும் என்றால் ஏன் இதை நாம் குப்பையில் இனி எறிய வேண்டும்? புளியில் தண்ணீர் விட்டு பர்னரை போட்டு மூடி வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் அடுப்பை பற்ற வைக்கும் பொழுது எடுத்து நன்கு துடைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனால் உங்களுடைய பர்னரின் ஆயுள் நீடிக்கும். கியாஸ் செலவும் மிச்சமாகும். ஓட்டைக்குள் இருக்கும் அடைசல் கூட எளிதாக நீக்கக் கூடிய சக்தி இந்த புளிக்கு உண்டு. எனவே இனி கியாஸ் பர்னர் கிளீன் செய்வதற்கு இந்த முறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். புளி சக்கையை தூக்கி போட வேண்டிய அவசியம் இனி இல்லாமல் போய்விடும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உபயோகமாக இருக்கும்.

- Advertisement -