முதல் பதிலடி : புல்வாமா தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் கைதி இந்திய ஜெயிலில் அடித்துக்கொலை – வைரல் வீடியோ

Pulwama

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

pulwama

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், இந்தியா முழுக்க பாகிஸ்தான் அரசுக்கு எதிரான கோஷங்களும், அவர்களின் மீது போர் தொடுக்குமாறும் மக்கள் இந்திய அரசாங்கத்திடம் முறையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள ஜெயிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த கைதி ஒருவர் ஜெய்ப்பூர் ஜெயிலில் சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக :

இந்த செய்தி தற்போது இணையதளவாசிகள் இடையே அதிகம் பகிரப்படும் வருகிறது. மேலும், பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு பதிலடி கொடுக்கவேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.