அனைவருக்கும் ஃபேவரட்டான இந்த புளியோதரையை எப்படி இன்னும் சுலபமாக குக்கரில் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

puliyodharai
- Advertisement -

புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் இது போன்ற உணவு வகைகள் பேச்சுலர்களுக்கான வரப்பிரசாதமாகும். இந்த உணவுகளை நினைத்த உடனே நொடிப்பொழுதில் தயார் செய்துவிட முடியும். அந்த அளவிற்கு இந்த உணவுகள் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவு வகைகளாகும். இந்த உணவு வகைகளை சமைப்பதில் பலர் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சரியான பக்குவம் தெரியாமல் அவர்களும் சொதப்பி விடுகிறார்கள். ஏனென்றால் இதுபோன்ற கலவை சாதங்களை செய்யும்பொழுது அவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் அளவும், தண்ணீரின் அளவும் சரியாக வைத்திருந்தால் மட்டுமே இதை சாப்பிடுவதற்கு நல்ல பக்குவத்தில் கிடைக்கும். வாருங்கள் இப்படி அனைவருக்கும் பிடித்த இந்த உணவு வகைகளில் ஒன்றான புளியோதரையை எப்படி சுலபமாக குக்கரில் செய்ய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி – 2 1/2 கப், புளி – எலுமிச்சை அளவு, வர மிளகாய் – 10, தனியா – ஒன்றரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், வெள்ளை எள் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், வேர்க்கடலை – 2 ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக்கொண்டு, அதில் அரிசியை சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் அதனுடன் தண்ணீர் சேர்த்து அரிசியை ஊற வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சை அளவு புளியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பத்து நிமிடத்திற்கு நன்றாக ஊற வைக்க வேண்டும்.

அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் அதில் வெந்தயம், மிளகு, வரமிளகாய் மற்றும் தனியா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்த புளியை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு புளி கரைசலுடன் சேர்த்து தண்ணீரையும் கலந்து கொண்டு இரண்டரை கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் புளிக் கரைசலை நன்றாக கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள புளியோதரை பொடியை 2 அல்லது 3 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சட்டென சுவையான புளியோதரை தயாராகிவிட்டது.

- Advertisement -