புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் இவற்றை செய்தால் அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறலாம்

punarpoosam

“குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை” என்பார்கள். அனைவருக்குமே கல்வி, கலைகளைக் கற்றுத் தரும் ஆசிரியரே குரு ஆவார். அதே போன்று இறைவனை அடைகின்ற ஞானமார்க்கத்தை நமக்குப் போதிக்கும் மகான்களே ஞானகுரு ஆவார்கள். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஞானத்தை போதிக்கும் நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமான குரு பகவான் இருக்கிறார். அந்த குரு பகவானின் ஆதிக்கதிற்குள்ளாக வரும் நட்சத்திரங்களில் ஒன்று புனர்பூசம் நட்சத்திரம் ஆகும். அந்தப் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும், வளமான வாழ்வையும் பெறுவதற்கு செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

guru bagwan

27 நட்சத்திரங்களின் வரிசையில் ஏழாவதாக வருகின்ற நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரமாகும். நவக்கிரக நாயகர்களில் புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இருக்கிறார். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கி மிகுதியான அதிர்ஷ்டங்களும், யோகங்களும் உண்டாக கீழ்கண்ட பரிகாரங்களை முறைப்படி செய்து வந்தால் நன்மைகள் பெறலாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி கோவிலுக்கு சென்று, அங்கிருக்கும் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கோவிலில் இருக்கும் நவக்கிரக சன்னிதியில் குருபகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி தீபமேற்றி குரு பகவானுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபாடு செய்வதால் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்வில் யோகங்கள் அதிகமுண்டாகும்.

bamboo tree

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண் தெய்வங்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்றோரை வழிபட்டு வருவதால் வாழ்வில் சங்கடங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். வெள்ளை, மஞ்சள் மற்றும் பச்சை நிற ஆடைகளை அணிந்து வருவதால் செல்வ ரீதியான யோகங்கள் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மூங்கில் மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று, மூங்கில் மரத்தையும் அங்கிருக்கும் இறைவனை வழிபடுவதால் புனர்பூச நட்சத்திரங்களின் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு உண்டாகும். வசதி குறைவான நபர்களின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும், உங்களின் அத்தனை விதமான தோஷங்களையும் போக்கி யோகமான வாழ்வை பெறச் செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.

இதையும் படிக்கலாமே:
மிகுதியான செல்வம், மகிழ்ச்சியான இல்லற வாழ்வை பெற இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Punarpoosam nakshatra dosha pariharam in Tamil. It is also called Punarpoosam natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Guru bhagavan natchathirangal in Tamil or Punarpoosam natchathira pariharangal in Tamil.