நீங்கள் மிகுதியான செல்வம், மகிழ்ச்சியான இல்லற வாழ்வை பெற இவற்றை செய்யுங்கள்

mangala-gauri

மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி தான் உலகை இயக்குகிறது என்பது ஆன்மீகவாதிகளின் கருத்தாகும். அப்படி அனைத்து உலகங்களையும் இயங்கச் செய்யும் மகா சக்தியாக இருப்பவள் அன்னை பார்வதி தேவி. சிவனின் சரிபாதியான சக்தியின் முழு ரூபமான பார்வதி தேவி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். அத்தகைய பெயர்களில் ஒன்று தான் மங்கள கௌரி. பக்தர்களுக்கு மங்களங்களை வழங்குகின்ற தேவியாக அவதரித்ததால் பார்வதிக்கு மங்கள கௌரி என்கிற ஒரு பெயர் உண்டானது. உண்மையான பக்தர்களுக்கு மங்களங்களை அளிக்க வல்ல தெய்வமான இந்த மங்கள கௌரி தேவியின் முழுமையான அருளைப் பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் மங்கள கௌரி ஹோமமாகும். இந்த மங்கள கௌரி ஹோம பூஜை செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

kaligambal

பௌர்ணமி தினங்கள், வளர்பிறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தினங்களிலும், உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற சுப தினங்களிலும் மங்கள கௌரி ஹோமம் செய்வது மிக சிறந்தது. இந்த மங்கள கௌரி ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் மங்கள கௌரி ஹோமத்தின் போது மங்கள கௌரி தேவியின் சிறிய மங்கள கௌரி விக்கிரகத்திற்கு புது வஸ்திரம் சாற்றி, வாசமுள்ள மலர்களால் அலங்கரித்து. இனிப்புகள் நைவேத்தியம் செய்து, மங்கள கௌரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.

Homam

இந்த மங்கள கௌரி ஹோமம் செய்து வழிபடும் நபர்களின் வாழ்வில் அனைத்து வகையான மங்களங்கள் உறுதியாக ஏற்படும். பெண்களுக்கு மனதிற்கினிய இல்லற வாழ்வு, நன்மக்கட் பேறும் அருளச் செய்யும் அற்புத ஹோம பூஜை இதுவாகும். ஜாதகத்தில் இருக்கின்ற கிரகங்களின் கடுமையான பாதிப்புகளை குறைத்து, நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பிரிந்து வாழ்தல் போன்ற இல்லற வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். ஒருவரின் உடல், மனம். ஆன்மாவில் கலந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகளை அறவே நீக்கும். பொருள், பொன், வீடு, வாகனம் போன்றவற்றின் சேர்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mangala gauri homam in Tamil. It is also called as Selvam sera in Tamil or Homangal in Tamil or Homam pooja in Tamil or Homangal palangal in Tamil.