அசல் பஞ்சாபி ஸ்டைல், பன்னீர் பட்டர் மசாலா மிக சுலபமாக வீட்டிலேயே செய்வது எப்படி?

punjabi-masala
- Advertisement -

பஞ்சாபி தாபா ஸ்டைலில் அருமையான ஒரு பன்னீர் பட்டர் மசாலா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை மாற்றாமல், அப்படியே செய்தால் அசல் பஞ்சாபி தாபாவில் விற்கும் கிரேவியின் அதே சுவை நமக்கு கிடைக்கும். மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க. ரெசிபிக்கு போகலாம். முதலில் உங்களுடைய வீட்டில் காய்ந்த பச்சை பட்டாணி தான் இருக்கின்றது என்றால், முந்தைய நாளே அதை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

pachai-pattani

ஒரு கைப்பிடி அளவு காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்த பின்பு, அதை குக்கரில் போட்டு 80% வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (ஒருவேளை உங்களுக்கு ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி கிடைத்தாலும் பரவாயில்லை. அதை சுத்தம் செய்து கழுவி வேகவைக்க வேண்டாம். அப்படியே வைத்துக் கொள்ளலாம்.) 200 கிராம் அளவு பன்னீரை கியூப் வடிவத்தில் துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த எண்ணெய் காய்ந்ததும் மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் வெட்டியது, முந்திரிபருப்பு – 10, மீடியம் சைஸ் தக்காளி – 2 நான்காக நறுக்கியது, இந்த பொருட்களை அந்த எண்ணெயில் சேர்த்து 1 நிமிடம் வரை வதக்க வேண்டும். அதன் பின்பு ஒரு மூடி போட்டு வெங்காயம் தக்காளி முந்திரிப்பருப்பு இந்த மூன்று பொருட்களையும், அப்படியே 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெங்காயம் தக்காளியையும் நன்றாக வெந்து வர வேண்டும்.

punjabi-masala1

சாஃப்டாக இந்த பொருட்கள் அனைத்தும் வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். இப்போது கிரேவியை தாளிக்க செல்வோம்.

- Advertisement -

ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். அதில் கட்டாயம் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை தான் சேர்க்கவேண்டும். வெண்ணை சேர்த்தால்தான் ரெசிபி சரியான சுவையில் கிடைக்கும். வெண்ணை உருகி வரும் போதே சீரகம் – 1 ஸ்பூன், பட்டை – 1, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் அந்த வெண்ணெயுடன் சேர்த்து கருக விடாமல் ஒரு நிமிடம் வதக்கினால் போதும். அடுப்பு கட்டாயம் சிம்மில் இருக்க வேண்டும்.

panner

இது கருவுறுவதற்கு முன்பு உடனடியாக அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் உள்ள மசாலா பொருட்களோடு சேர்த்து, நன்றாக கலந்து விட்டு, வேக வைத்திருக்கும் பட்டாணியை கடாயில் சேர்த்து விடுங்கள். இந்த இடத்தில் தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு 6 நிமிடங்கள் இந்த விழுதை மிதமான தீயில் கொதிக்க வைத்தால் போதும்.

punjabi-masala2

கிரேவி 6 நிமிடம் கொதித்து முடித்தவுடன், வெட்டி வைத்திருக்கும் பன்னீரை கிரேவி யோடு சேர்த்து விட வேண்டும். பன்னீரை சேர்த்து, பன்னீர் கிரேவியை மூடி, 2 நிமிடம் மிதமான தீயில் அடுப்பில் இருந்தால் போதும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக  இதில் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொண்டால் சுவையாக இருக்கும். சர்க்கரை பிடிக்காது என்பவர்கள் சர்க்கரையை தவிர்த்துக் கொள்ளலாம்.

punjabi-masala3

இறுதியாக காய்ந்த வெந்தய கீரை என்று சொல்லும் கஸ்தூரி மேதியை 1/2 ஸ்பூன் அளவு மேலே தூவி விட்டால் போதும். பஞ்சாபி ஸ்டைல் கிரேவி தயார். உங்களுடைய வீட்டில் ஃபிரஷ் க்ரீம் இருந்தால் மேலே ஒரு ஸ்பூன் ஊற்றிக் கொள்ளலாம். இல்லாதவர்கள் அதை ஊற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சப்பாத்தி, பரோட்டா, ஃபுல்கா, வெள்ளை புலாவ் இவைகளுக்கு இந்த கிரேவி செம சைட் டிஷ்.

- Advertisement -